With Love Rajinikanth: செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு.. ‘வித் லவ்’ படத்துக்கு ரஜினி விமர்சனம்!
சென்னை: செளந்தர்யா ரஜினிகாந்தின் Zion புரொடக்ஷன் மற்றும் மகேஷ் ராஜின் MRP தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 'வித் லவ்' படத்தை மதன் இயக்கியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் அனஸ்வரா ராஜன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சரவணன், ஆர்ஜே ஆனந்தி, ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

வரும் பிப்ரவர் 6ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், நேற்று அதன் பிரத்யேக காட்சிகள் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுக்காகவும் சத்யம் திரையரங்கில் பிரபலங்களுக்காகவும் போடப்பட்டது. செலிபிரிட்டி ஷோவில் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்து படத்தை பார்த்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனது மகள் படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் சொன்ன வார்த்தைகள் படத்துக்கு மேலும், பெரிய பூஸ்ட்டாக மாறியுள்ளது.
அபிஷன் ஜீவிந்த் நடிப்பு எப்படி?
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஒரு சிறிய ரோலில் அபிஷன் ஜீவிந்த் நடித்தாலும் அவரது கதாபாத்திரம் படத்துக்கு முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோவாக நன்றாகவே நடித்துள்ளார். சத்யா எனும் கதாபாத்திரத்தில் பள்ளி மாணவனாகவும் கல்லூரி முடித்து விட்டு கல்யாணத்துக்காக பெண் தேடும் இளைஞராகவும் அந்த பெண்ணுடன் சேர்ந்துக் கொண்டு பழைய காதலியை சந்திக்கும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். முதல் பாடலில் நல்லா டான்ஸ் ஆடியும் அசத்தியுள்ளார்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்:
வித் லவ் படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள், யூடியூபர் விமர்சகர்கள் என பலரும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். 3.5 ரேட்டிங் முதல் 4 ரேட்டிங் வரை இந்த படத்துக்கு கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு டூரிஸ்ட் ஃபேமிலி சர்ப்ரைஸாக ஓடியது போல வித் லவ் படமும் ஓடினால் தமிழ் சினிமாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.
ரஜினிகாந்த் என்ன சொன்னார்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வித் லவ்' திரைப்படத்தை நேற்று சத்யம் தியேட்டருக்கு வந்து பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியேறும் போது பத்திரிகையாளர்கள் ரஜினிகாந்திடம் படம் எப்படி இருக்கு? என்கிற கேள்வியை எழுப்ப, "வெரி நைஸ்.. சூப்பர்.. ரொம்ப நல்லா இருக்கு" என பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்தார். தயாரிப்பாளராக உங்கள் மகளின் உழைப்பு எப்படி? என்கிற கேள்விக்கு, "ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க" என்று வாழ்த்திவிட்டு காரில் ஏறி சென்றார். வரும் பிப்ரவரி 6ம் தேதி மக்கள் அனைவரும் படத்தை பார்த்து விட்டு எந்தளவுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











