With Love: வித் லவ் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. மகளுக்காக அவர் வராம வேற யாரு வருவா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸ் மற்றும் எம்.ஆர். பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் வித் லவ். படம் வரும் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் ப்ரிவியூவ் ஷோ சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்க்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சத்யம் தியேட்டருக்கு வந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் அந்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் படத்தை பாராட்டினர். படத்திற்கு தேசிய விருதுகள் கிடைக்க கூட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வித் லவ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர். பி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மகேஷ் ராஜ் என இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தில் கதாநாயகியான அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். படத்தின் பிரிவியூ ஷோ இன்று அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் திரையிடப்பட்டது. படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

பாராட்டு: படம் பார்த்த பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பாலகிருஷ்ணன் அவரது எக்ஸ் பதிவில், " படத்தின் கதை மிகவும் நெருக்கமானதாகவும் புதிதாகவும் உள்ளது. அனைவரது பள்ளி நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்க்க வைக்கும். அபிஷன் ஜீவிந்த் சிறப்பாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை அவர் கையாண்ட விதம், எமோஷனலான காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்து காட்சிகளிலும் மிரட்டி விட்டார். அனஸ்வரா ராஜன் நடிப்பு கலக்கலாக உள்ளது. அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும். ஷான் ரோல்டன் எப்போதும் போல சிறப்பு.
ரஜினி: படத்தின் இயக்குநர் மதன் தனது அறிமுக படத்திலேயே ஃபீல் குட் படத்தை கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார். தயாரிப்பாளர்களான சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் என இருவருக்கும் வாழ்த்துகள். இந்த ஃபீல் குட் படத்தைக் கொடுத்ததற்காக நன்றிகளும். படத்தை தியேட்டரில் மிஸ் செய்துவிடாதீர்கள்" என்று பதிவிட்டிருந்தார். இவரது இந்த விமர்சனம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே படம் பார்க்க சத்யம் தியேட்டருக்கு வந்தது குறித்த பேச்சு திரைதுறையில் பரவலாக ஓடிக் கொண்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் பலரும் சூப்பர் ஸ்டார் தனது மகளுக்காக அவர் வராமல் வேறு யார் வருவார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











