முடிச்சிடலாமா.. வேட்டையன் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மும்பை பறந்த ரஜினிகாந்த்.. சம்பவம் வெயிட்டிங்!

சென்னை: வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் மும்பை கிளம்பிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுதபூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு வேட்டையன் வெளியாகும் என்னை எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்பீம் படத்துக்குப் பிறகு ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

Rajinikanth went to Mumbai for Vettaiyan last schedule

இந்நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை கிளம்பி சென்றுள்ள காட்சிகள் சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.

ஜெயிலர் தந்த உற்சாகம்: காலா, தர்பார் மற்றும் அண்ணாத்த போன்ற படங்கள் சரியாக ஓடாத நிலையில் அப்செட்டாக இருந்தால் ரஜினிகாந்துக்கு கடந்தாண்டு வெளியான ஜெயிலர் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இண்டஸ்ட்ரி ஹிட் அந்த படம் அடித்த நிலையில், தொடர்ந்து சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

Rajinikanth went to Mumbai for Vettaiyan last schedule

இறுதி கட்டப் படப்பிடிப்பு: ஏற்கனவே வேட்டையன் படத்தின் சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. அமிதாப் பச்சன் அந்த காட்சிகளில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருந்தார். மீண்டும் தற்போது மும்பையில் சில காட்சிகளை படமாக்க ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அங்கிருந்து விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பிச் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

விரைவில் கூலி: வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் கூலி படத்தின் சூட்டிங் நடிகர் ரஜினிகாந்த் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த உள்ள கூலி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அனுமதி பெறாமல் தனது இசையை பயன்படுத்தி விட்டதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது ரஜினி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X