கணவருடைய கூலி திரைப்படம்.. பார்த்துவிட்டு ரஜினி மனைவி சொன்ன விமர்சனம்.. ஓபனா அடிச்சிருக்காங்களே

சென்னை: லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் எல்லாம் மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கின்றன. எனவே முதல் நாள் வசூல் எங்கேயோ போகப்போகிறது என்பது பாக்ஸ் ஆஃபிஸ் கணக்கீட்டாளர்களின் கணக்காக இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் மனைவி கூலி திரைப்படம் பார்த்துவிட்டாராம்.

ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானபோதே பலருக்கும் மகிழ்ச்சி. ஏனெனில் சமீபகாலமாக இளம் தலைமுறை இயக்குநர்களுடன் மட்டுமே பணியாற்ற விரும்புகிறார் ரஜினி. அந்த இயக்குநர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் லோகேஷ். கூலிக்கு முன்னதாக அவர் இயக்கிய ஐந்து படங்களுமே ஹிட் என்ற ரிசல்ட்டைத்தான் கொடுத்திருக்கின்றன. அதன் காரணமாக இக்கூட்டணி பெரிய மேஜிக் செய்யும் என்று நம்பப்படுகிறது.

ட்ரெய்லர் சுமார்தான்: படத்தின் பாடல்கள் முதலில் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றன. ஆனால் போகப்போக பாடல்கள் பிக்கப் ஆகிவிட்டன. அதேசமயம் ட்ரெய்லரோ பலரை திருப்திப்படுத்தவில்லை. இதுவும் ஒருவகையில் நல்லதுதான்; ட்ரெய்லரில் ஹைப் ஏற்றிவிட்டால் ரசிகர்கள் வானளவு எதிர்பார்ப்புடன் வருவார்கள்; எனவே இதை சுமாராக காட்டி படத்தை சூப்பராக காட்டுவதுதான் லோகியின் பிளான் எனவும் ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டார்கள்.

Rajinikanth Wife Latha has reviewed Coolie Movie after watching it
Photo Credit:

கோடிக்கணக்கில் வசூல்: படத்துடைய டிக்கெட் புக்கிங் தொடங்கியவுடன் இணையதளங்கள் பற்றிக்கொண்டன. கேரளாவில் ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட் விற்றது; மேலும் பல மாநிலங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது என ப்ரீ புக்கிங் ரிசல்ட் படக்குழுவுக்கு மிகப்பெரிய மன திருப்தியை கொடுத்திருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் புக்கிங்கில் வசூலாகியிருப்பதாக தெரிகிறது.

1000 கோடி ரூபாய் வசூல்?: படத்தின் டிக்கெட் புக்கிங்கிலேயே நூறு கோடி ரூபாய் வசூல் என்பது இதுவரை எந்தப் படமும் செய்யாத சாதனை என்றே கருதப்படுகிறது. 74 வயதிலும் இவ்வளவு மாஸை ரஜினி பெறுகிறாரே என்று ஆச்சரியத்தி மூழ்கியிருக்கிறது திரையுலகம். கண்டிப்பாக முதல் நாள் வசூலும் பட்டையை கிளப்பும்; மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இப்படம் செய்யத்தான் போகிறது என்பது ரசிகர்களின் திண்ணமான நம்பிக்கை.

படம் பார்த்த லதா?: கூலி படத்தை பார்த்த ரஜினிகாந்த் செம மகிழ்ச்சியாகி இன்னொரு படமும் லோகேஷுடன் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் மனைவி லதாவும் கூலி படத்தை பார்த்தாராம். தன் கணவரின் அனைத்து படங்களையும் ரிலீஸுக்கு முன்னதாகவே பார்த்து சரியான விமர்சனத்தை சொல்லக்கூடிய அவர்; கூலி படத்தை பார்த்து தன் கணவர் நடித்த டாப் படங்களின் லிஸ்ட்டில் கூலியும் இருக்கும் என கூறியதாக தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X