வேட்டையன், லால் சலாம் மட்டுமில்ல.. தலைவர் 171 அப்டேட் இதோ.. நெற்றிக்கண்ணை திறக்கப் போகும் பாட்ஷா!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று லால் சலாம் மற்றும் வேட்டையன் அப்டேட்கள் வெளியான நிலையில், தலைவர் 171 படம் பற்றிய தரமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
லியோ படத்தில் விஜய்க்குள் இருந்த நடிப்பு அரக்கனை வெளியே கொண்டு வந்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் ரஜினிகாந்த்தை வெறித்தனமான வில்லன் ஷேடில் காட்டப் போவதாக கூறுகின்றனர். வேட்டையன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரிக்குள் நிறைவடைந்து விடும் என்றும் மார்ச் மாதம் முழுவதும் ரஜினி ஓய்வெடுத்து விட்டு ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கின்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன், கிங் கான் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், ஜூனியர் என்டிஆர், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் அறிமுகம் டீசரை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினிகாந்தின் மாஸ் சண்டை காட்சியையும் லைக்கா நிறுவனம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தது.
வேட்டையன், லால் சலாம் அப்டேட்: ரெண்டு படங்களின் சூப்பரான அப்படி கிடைத்த நிலையில், தலைவர் 171 படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தலைவர் 171-வது படத்தில் ரோல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
நெகட்டிவ் ரோலில் ரஜினி: கேங்ஸ்டர் படங்களுக்கு பெயர்போன லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தையும் கேங்ஸ்டர் படமாகவே பாட்ஷாவை விட பெரிய அளவுக்கு ஒரு படத்தை கொடுக்க முயற்சித்து வருவதாகவும் அந்த படத்தில் நெற்றிக்கண் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தது போல நெகட்டிவ் ஷேட் இருக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முக்கிய ரோல் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலைவர் 171 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











