ஜெய்பீம் இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170.. ரஜினிகாந்துக்கு இப்படியொரு ரோலா?

சென்னை: ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் தான் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், லைகா தயாரிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கதாபாத்திரம் குறித்த ஹாட்டான தகவல்கள் வலம் வருகின்றன.

டான் இயக்குநர்

டான் இயக்குநர்

சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தான் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும், சிபி சக்கரவர்த்திக்கு லைகா நிறுவனம் ஆபிஸே போட்டுக் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.

லவ் டுடே இயக்குநரும் வேண்டாம்

லவ் டுடே இயக்குநரும் வேண்டாம்

சிபி சக்கரவர்த்தியை தொடர்ந்து லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பெயரும் ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்கும் லிஸ்ட்டில் அடிபட்டது. சமீபத்தில், பிரதீப் ரங்கநாதன் லண்டனுக்கு சென்று லைகா சுபாஷ்கரனை சந்தித்த நிலையில், பிரதீப் இயக்கப் போகிறாரா? என பரபரப்பு கிளம்பிய நிலையில், கடைசியில் த. செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஓகே சொல்லி இருக்கிறார்.

ஜெய்பீம் போல சர்ச்சைகள் வெடிக்குமா

ஜெய்பீம் போல சர்ச்சைகள் வெடிக்குமா

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் சர்வதேச அளவில் விருதுகளை குவித்ததை போலவே அரசியல் ரீதியான பெரும் சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்தது. பாமகவினர் ஜெய்பீம் திரைப்படம் குறிப்பிட்ட சாதியையும் தலைவர் ஒருவரையும் தப்பாக இந்த படம் சித்தரித்துள்ளது என பிரச்சனைகளை கிளப்பினர். அதே போல தலைவர் 170 படத்தின் கதையும் சர்ச்சைக்குரிய கதையாக இருக்குமா? என்கிற கேள்விகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னர் எழுந்துள்ளது.

தோசை ராஜாவின் கதையா

தோசை ராஜாவின் கதையா

பெரிய ஹோட்டல் நிறுவனத்துக்கு எதிராக தோசை ராஜா என அழைக்கப்பட்ட ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஞானவேல் ஈடுபட்டு வந்த நிலையில், ரஜினிகாந்த் இந்த படத்தில் தோசை கிங்காக நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வியும் தற்போது ஹெவியாக எழுந்துள்ளது.

டைட்டில் வந்தால் தெரியும்

டைட்டில் வந்தால் தெரியும்

ஆனால், இதுவரை தலைவர் 170 படத்தின் கதை தோசை கிங்கின் கதை என்பது குறித்து இயக்குநர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானால் எந்த மாதிரியான படம் என்ன கதை என்பது புரிய வரும் என ரசிகர்கள் அடுத்த ஹாட் அப்டேட்டுக்கு காத்திருக்கின்றனர்.

வெறித்தனம் காட்டும் ரஜினி

வெறித்தனம் காட்டும் ரஜினி

இதற்கு முன்பு வரை ஒரு படத்தை முடித்து விட்டு அதன் ரிலீஸுக்கு பின்னர் தான் ரஜினிகாந்தின் அடுத்த பட அறிவிப்பே வெளியாகும். ஆனால், தற்போது ஜெயிலர் படம் வெளியாகும் முன்னதாகவே லால் சலாம், தலைவர் 170 என வெறித்தனம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த்.

விருது கன்ஃபார்ம்

விருது கன்ஃபார்ம்

கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க சம்மதித்ததே நல்ல விஷயம் என்றும் அவரது 170வது படத்தின் மூலம் நிச்சயம் பல விருதுகள் குவியும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்கர் போட்டிக்கு வரை ஜெய்பீம் சென்றதும், ஆஸ்கர் குழுவினரால் பாராட்டுக்களை அள்ளியதும், சர்வதேச விருதுகளை அந்த படம் குவித்ததும் தான் தலைவர் 170 படமும் அதே போல விருதுகளை அள்ளும் என்கிற எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X