Rajini Salary - லோகேஷ் கனகராஜின் படம்.. ரஜினிக்கு இவ்வளவு சம்பளமா?.. வாய் பிளந்த கோலிவுட்

சென்னை: Rajini Salary (ரஜினி சம்பளம்) லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ரஜினிக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குநராக இருக்கிறார். இதுவரை அவர் எடுத்த நான்கு படங்களும் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக மாஸ்டர் படமும், விக்ரம் படமும் நூறு கோடி ரூபாயை அசால்ட்டாக வசூலித்தன. அதிலும் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி லோகேஷ் கனகராஜின் க்ராஃபை உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. இதனால் அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை நடிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது.

Rajinikanth Will Get 160 Crores For Lokesh Kanagaraj Movie

லியோ லோகேஷ் கனகராஜ்: லோகேஷ் இப்போது விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். படத்தின் 60 நாட்கள் ஷூட்டிங் சமீபத்தில் காஷ்மீரில் நடந்து முடிந்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு நடந்துவந்த ஷூட்டிங் இப்போது பையனூரில் நடந்துவருகிறது. அங்கு விஜய்க்கும், சஞ்சய் தத்துக்குமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அடுத்தது என்ன?: லியோ படத்த முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்பதுதான் பலரின் இப்போதைய கேள்வி. ஏற்கனவே கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தொடங்கவிருக்கிறார் என கருதப்பட்டது. கைதி ப்ளாக் பஸ்டர் படம் என்பதால் அதன் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ரொம்பவே ஆவலோடு இருக்கின்றனர்.

ரஜினியுடன் இணையும் லோகேஷ்: இதற்கிடையே கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் ஒரு தகவல் பரவிவருகிறது. அதாவது கைதி 2 படத்திற்கு முன்னதாக ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கப்போகிறார் என்பதுதான் அது. ஆனால் கைதி 2 படத்தின் ப்ராசஸ் நீண்ட நாட்களாக வெயிட்டிங்கில் இருப்பதால் அந்தப் படத்தின் ஷூட்டிங்கைத்தான் முதலில் தொடங்குவார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

போட்டிப்போடும் நிறுவனங்கள்: கைதி 2 படத்தை எடுத்தாலும் ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் படம் உறுதி என கூறப்படுகிறது. மேலும் அந்தப் படத்தை தயாரிக்க கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ், புஷ்பா, வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், வாரிசு படத்தை தயாரித்த வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தமிழில் இருந்து சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ரேஸில் இருக்கின்றன.

Rajinikanth Will Get 160 Crores For Lokesh Kanagaraj Movie

புதிய தகவல்: இந்நிலையில் லோகேஷ் கனகராஜும் - ரஜினியும் இணையும் படம் குறித்த புதிய தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தை மாஸ்டர், லியோ படங்களை தயாரித்த லலித்குமாரே தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இப்போது பேச்சு ஒன்று எழுந்திருக்கிறது. காஷ்மீரில் திட்டமிட்டப்படி கனகச்சிதமாக லோகேஷ் கனகராஜ் லியோ ஷூட்டிங்கை முடித்ததால் அவரை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போடலாம் என்ற நம்பிக்கையை பெற்றிருக்கிறாராம் லலித்குமார்.

ரஜினியின் சம்பளம்: இந்தச் சூழலில் ரஜினியின் சம்பளம் குறித்து புதிய பேச்சு எழுந்திருக்கிறது. விஜய் இப்போது 130 கோடி ரூபாயை நெருங்கிவிட்டார். அஜித்தும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்க ஆரம்பித்துவிட்டார். யார் எவ்வளவு வாங்கினாலும் ரஜினிதான் சம்பள விஷயத்தில் எப்போதும் டாப்பில் இருப்பவர். தர்பார், அண்ணாத்த கொடுத்த தோல்வியை அடுத்து ஜெயிலருக்காக 80லிருந்து 90 கோடி ரூபாய் வரை தான் அவர் சம்பளமாக பெற்றிருக்கிறாராம்.

ஆனால் ஜெயிலர் படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்பதாலும், லோகேஷுடன் இணையும் படத்துக்கு தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் டிமாண்ட் அதிகம் இருப்பதாலும் அந்தப் படத்துக்கு 160 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று தான்தான் நம்பர் 1 என்பதை நிரூபிக்க ரஜினிகாந்த் முழு முனைப்போடு இருக்கிறார் என்கின்றனர் கோலிவுட்டினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X