தலைவர் 171க்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?.. விஜய்க்குத்தானே இதை சொன்னாங்க?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். த.செ.ஞானவேல் இயக்கிவரும் அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் பெயர் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தச் சூழலில் தலைவர் 171 படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. அடுத்ததாக லால் சலாம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து கையில் சூடு போட்டுக்கொண்டார் அவர். இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கிறது படம். ஏனெனில் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி நல்ல பெயரையும் ஏற்படுத்தி கொடுத்தது.

Rajinikanth Will Get 250 Crore Salary For Thalaivar 171 Movie

வேட்டையன் ரிலீஸ்: வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக வருகிறார். அவர் போலி என்கவுன்ட்டருக்கு எதிராக களமாடுவது போன்று கதை நகரும் என்று கூறப்படுகிறது. மேலும் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு ஷெட்யூல்தான் பாக்கி இருக்கிறதாம். அதாவது இன்னும் சில காட்சிகள் மற்றும் ஒரு ஓபனிங் பாடலுக்கான படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் இருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. ஏப்ரல் 22ஆம் தேதி பிரமாண்ட செட்டில் ஓபனிங் பாடல் ஷூட்டிங் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர். வேட்டையன் படத்தின் டைட்டில் இண்ட்ரோவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.]

தலைவர் 171: சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். கமல் ஹாசனுக்கு எப்படி லோகேஷ் விக்ரம் என்ற மெகா ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்தாரோ அதேபோன்ற ஒரு படத்தை ரஜினிக்கும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக தனது டீமுடன் முழு மூச்சாக பணியாற்றிவருகிறார். கண்டிப்பாக இந்தப் படம் இந்திய அளவில் பேசப்படக்கூடிய படமாக இருக்க வேண்டும் என சன் பிக்சர்ஸும் விருப்பம் தெரிவித்திருக்கிறது.

ஷோபனா, மோகன்: தலைவர் 171ல் வில்லனாக நடிப்பதற்கு 80ஸ் ஃபேவரைட் ஹீரோ மைக் மோகனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும்; அதற்கு முதலில் ஓகே சொன்ன அவர் பிறகு நோ சொல்லியதாகவும் தெரிகிறது. அதேபோல் தளபதி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஷோபனாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. படத்தின் பெயர் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த்தின் சம்பளம்: இந்நிலையில் தலைவர் 171 படத்துக்காக ரஜினிகாந்த் வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி அவர் 250 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறவிருக்கிறாராம். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் ஜெயிலர் படத்திற்காக அவர் 150 கோடி ரூபாய்வரைதான் சம்பளம் வாங்கினார் என்று சொல்லப்பட்டது. தற்போது 250 கோடி ரூபாய் வாங்கவிருக்கிறார் என்று சொல்லப்படுவதால் ஒரே படத்தில் 100 கோடி ரூபாயை ஏற்றிவிட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதற்கிடையே விஜய் தனது 69ஆவது படத்துக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X