அது ஏன் ரஜினியிடம் போய் விஜயலட்சுமி ஹெல்ப் கேட்டார்.. வேறு நடிகர்களே இல்லையா?

Recommended Video

Vijayalakshmi:Rajini Called me: Rajiniயே Call பண்ணி பேசுனாரு

சென்னை: ரஜினிகாந்த் மிகப் பெரிய நடிகர். வேறு நடிகர்களிடமும் உதவி கேட்டேன். ஆனால் யாரும் உதவவில்லை. இதனால்தான் ரஜினியிடம் உதவி கேட்டேன் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

ஃபிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. அதன் பின்னர் அவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கன்னட திரையுலகம் பக்கம் ஒதுங்கினார். அங்கும் அவருக்கு போதிய படவாய்ப்புகள் இல்லாததால், வீட்டிலேயே முடங்கியிருந்தார்.

சின்னத்திரையில் கவனம் செலுத்தினார் சீரியல்களில் நடித்தார். நந்தினி சீரியலில் கூட நடித்த அவர் பாதியிலேயே காணாமல் போனார். அவருக்கு பதில் வேறு நடிகையை போட்டு சீரியலை முடித்தனர்.

சிரமத்தில் விஜயலட்சுமி

சிரமத்தில் விஜயலட்சுமி

அவ்வப்போது பரபரப்பில் அடிபடும் விஜயலட்சுமியுடன் அம்மா மற்றும் சகோதரியும் வசித்து வந்தாலும் வருமானத்திற்கு விஜயலட்சுமியை மட்டுமே நம்பியிருக்கின்றனர். போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் அன்றாட செலவுகளுக்கே சிரமப்பட்டு வந்தார். கூடவே உடல் நிலையும் மோசமானது. இதனையடுத்து கன்னட படவுலகினர் சிலரிடம் உதவி கேட்டு சென்றார். ஆனால் அவர்கள் உதவி செய்ய மறுத்துவிட்டதாக தெரிகிறது.

நரக வேதனை

நரக வேதனை

ஊடக வெளிச்சத்தில் இருந்து மறைந்து இருந்த விஜயலட்சுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோவில் பேசியதை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு மாதத்துக்கு முன்பு உடல் நிலை சரியில்லை என்றும், சென்னையில் கஷ்டத்துடன் இருந்தேன் அதனால் பெங்களூருக்கு வந்தேன் என்றும், இங்கு வந்தும் நரக வேதனைப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார்.

ரஜினிக்கு வீடியோ

ரஜினிக்கு வீடியோ

நான் உயிருடன் இருப்பது என் அம்மா அக்காவுக்காகத்தான் என்று கூறினார். நான் கஷ்டப்படுவதற்கு காரணமானவர்கள் அவர்கள் நன்கு வாழ்வதற்கு என் வாழ்க்கையை கஷ்டப்படுத்துகிறார்கள் என்று கூறினார். அவர் ரஜினிகாந்த்தை பார்க்க வேண்டும் என்று கூறினார், ஏனென்றால் இங்கு எனக்கு யாரும் உதவவில்லை. ரஜினிகாந்திடம் இந்த வீடியோவை சேர்த்து விடுவிங்கள் என்று கூறினார்.

ரஜினி பேசியது ஆறுதல்

ரஜினி பேசியது ஆறுதல்

அந்த வீடியோவிற்குப் பிறகு இன்று ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது, ரஜினிகாந்த் எனக்கு ஆறுதல் கூறினார் என்றும், அவர் மிகப் பெரிய நடிகர் அவர் எனக்காக நேரம் ஒதுக்கி பேசியது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அது மட்டுமின்றி எல்லாரும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் அவர் நல்ல எண்ணத்திற்கு மரியாதை அளிக்கிறேன் என்றும் கூறினார்.

ரஜினி சொன்னால் செய்வார்

ரஜினி சொன்னால் செய்வார்

இப்படி ஒரு நல்ல மனிதர் நமக்கு தலைவராக இருக்க வேண்டும் என்றும், அவர் நினைத்த அனைத்தும் வெற்றிபெற வேண்டும் என்றும், அவர் உதவி செய்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக செய்வார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவருக்கு மிக்க நன்றி கூறுகிறேன் என்றும் கூறினார்.

தைரியமாக இருக்கச் சொன்னார்

தைரியமாக இருக்கச் சொன்னார்

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி, ரஜினி அதிகமாக பேசவில்லை என்றும் என் உடல் நிலையை நன்றாக பார்த்துக்கொள்ளவும் தைரியமாக இருக்கவும் என்று கூறினார். அது எனக்கு சந்தோசமாகவும் மனதிற்கு நிம்மதியாகவும் இருக்கிறது என்றார்.

ரஜினி உதவுவார்

ரஜினி உதவுவார்

வேறு நடிகர்களிடம் உதவி கேட்டும் கிடைக்கவில்லை, அதனால் ரஜினிகாந்த்திடம் கேட்டதாகவும் ரஜினி உதவி செய்வார் என்று நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறினார். தற்போது நண்பர்களும், ஆசிரியர்களும் உதவி செய்கிறார்கள் என்று நடிகை விஜயலட்சுமி கூறினார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X