மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது.. ரஜினிகாந்த் இன்று வழங்குகிறார்

சென்னை: நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது புகழை சிறப்பிக்கும் வகையில் கர்நாடக ரத்னா விருது இன்று வழங்கப்படுகிறது.

நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பிறகு அவரது பெயரால் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் அவ்விருதினை வழங்க உள்ளார்.

மாரடைப்பால் மறைவு

மாரடைப்பால் மறைவு

1975ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி சென்னையில் பிறந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கர்நாடக ரத்னா விருது

கர்நாடக ரத்னா விருது

பாரத ரத்னா விருது போல கர்நாடக ரத்னா எனும் விருதினை மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் வழங்கப்படும் விழா நவம்பர் 1ம் தேதியான இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார். இதுவரை 9 பிரபலங்களுக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்ட நிலையில், 10வது விருது இன்று வழங்கப்பட உள்ளது.

ரஜினிகாந்த் வழங்குகிறார்

ரஜினிகாந்த் வழங்குகிறார்

நம்ம அப்பு புனித் ராஜ்குமார் மறைந்த பிறகு அவரை சிறப்பிக்கும் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் என்னை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைத்தது பெரும் மகிழ்ச்சி கண்டிப்பாக வரும் நவம்பர் 1ம் தேதி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் முன்னதாக அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில், இன்று அந்த விருது வழங்க பெங்களூருக்கு ரஜினிகாந்த் புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜூனியர் என்டிஆர் வருகை

ஜூனியர் என்டிஆர் வருகை

இந்த விழாவில் மற்றொரு சிறப்பு விருந்தினராக டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்கிறார். காலையிலேயே பெங்களுருவுக்கு அவர் வந்து சேர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கன்னட திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X