twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது...தொலைபேசியில் வாழ்த்திய முதல்வர் !

    |

    சென்னை : இந்திய சினிமா துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது.

    இந்தியன் 2 விவகாரம்.. ஷங்கருக்கு எதிராக லைகா வழக்கு.. அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்!இந்தியன் 2 விவகாரம்.. ஷங்கருக்கு எதிராக லைகா வழக்கு.. அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்!

    51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

    1969ம் ஆண்டு முதல்

    1969ம் ஆண்டு முதல்

    இந்திய சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது தாதா சாகேப் பால்கே விருது. சினிமா துறையில் சாதித்தற்காக கொடுக்கப்படும் விருதாகும். இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் நினைவாக, இந்திய அரசு 1969-ம் ஆண்டிலிருந்து அவர் பெயரில் இந்த விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது.

    தாதா சாகேப் பால்கே விருது

    தாதா சாகேப் பால்கே விருது

    இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகரான ரஜினிகாந்திற்கு 51 வது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக அவரை கௌரவிக்கும் வகையில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சம் பிரகாஷ் ஜவ்டேகர் கூறினார்.

    தொலைபேசியில் வாழ்த்து

    தொலைபேசியில் வாழ்த்து

    மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசி வாயிலாக ரஜினிகாந்த்துக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

    பலரும் வாழ்த்து

    பலரும் வாழ்த்து

    தாதா சாகேப் பால்கே விருது, ஏற்கெனவே நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்குவாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் தனது மகிழ்ச்சியை இணையத்தின் வாயிலாக தெறிக்கப்பட்டு வருகின்றனர்.

    English summary
    Rajinikanth will receive the Dadasaheb Phalke award.. Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami congratulated him
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X