Indian 2: இந்தியன் 2 இன்ட்ரோவை வெளியிடும் ரஜினிகாந்த்.. உண்மையான நட்புன்னா இப்படி இருக்கணும்!

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் அறிமுக காட்சியை நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகவும் இன்னமும் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை உருவாக்கி வரும் நடிகர்களாக கமல் மற்றும் ரஜினி உள்ளனர்.

Rajinikanth will release Kamal Haasans Indian 2 intro tomorrow

விக்ரம் படத்தின் வசூலை ஜெயிலர் முறியடித்த நிலையில், ஜெயிலர் வசூலை லியோ முறியடித்துள்ளது. அடுத்து லியோ வசூலை இந்தியன் 2 அசால்ட்டாக முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1000 கோடி அடிக்குமா?: தெலுங்கு திரைப்படங்களான பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னட படமான கேஜிஎஃப் 2 படங்கள் பான் இந்தியா அளவில் 1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளன. ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ 1000 கோடி வசூல் சாதனையை படைக்க முடியவில்லை. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 அந்த சாதனையை அடையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விக்ரம் வசூல் வேட்டை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் கடந்த ஆண்டு வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தியிருந்தது. இந்நிலையில், விக்ரம் படத்தைத் தொடர்ந்து வெளியாக உள்ள கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் இந்தியாவிலும் ஓவர்சீஸிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வசூல் வேட்டை நடத்தும் என தெரிகிறது.

ரஜினிகாந்த் ரிலீஸ்: உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. அதனை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடப் போவதாக தற்போது லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வருஷங்கள் தோறும் வளரும் நட்பு: பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் நட்பு வளர்ந்து வரும் நிலையில், அதன் அடையாளமாக இந்தியன் 2 அறிமுக வீடியோவை ரஜினி வெளியிட உள்ளார் என லைகா அறிவித்துள்ளது.

லைகா தயாரிப்பில்: தலைவர் 170 மற்றும் லால் சலாம் உள்ளிட்ட படங்களை லைகா தயாரித்துள்ள நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோவை ரஜினி வெளியிட உள்ளது குறீப்பிடத்தக்கது. டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவுக்கு கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X