அஜித் படத்தையே ஆட்டையை போட நினைத்த ரஜினிகாந்த்.. எந்த படம் தெரியுமா?.. லிங்குசாமி பேட்டி!

சென்னை: லோகேஷ் கனகராஜிடம் லியோ படத்தின் கதையை கேட்ட ரஜினிகாந்த் அதை அப்படியே தனது ஜெயிலர் படத்திலும் பல இடங்களில் பயன்படுத்திக் கொண்டதாக பஞ்சாயத்து ஒன்று கிளம்பியது.

கெளதம் மேனனின் ஸ்னைபர் ஷாட் மற்றும் அந்த ஹைனா கிளைமேக்ஸில் வரும் காட்சிகள் அப்படியே ஜெயிலரில் மாற்றி அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Rajinikanth wish to change Ajith Kumars Ji story revealed by Lingusamy


இந்நிலையில், அதற்கெல்லாம் முன்னதாக அஜித் படத்தையே ரஜினிகாந்த் தனக்கான படமாக மாற்றி எடுக்கச் சொல்லி சொன்னதாக இயக்குநர் லிங்குசாமி பேசிய பேட்டி அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஜெயிலர் vs லியோ: தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டியில் சொல்லும் போது லியோ படத்தின் காட்சிகளை நடிகர் ரஜினிகாந்த் அப்படியே சொன்னார் எனக் கூறியிருந்தார். அந்தளவுக்கு லியோ படத்தின் கதையை ரஜினியிடம் லோகேஷ் கனகராஜே கூறியிருப்பது தெரிய வருகிறது. அதன் காரணமாகவே இரு படங்களிலும் பல காட்சிகள் ஒரே மாதிரியாக உள்ளதா? என்கிற கேள்விகளும் கிளம்பின. ஹைனா காட்சிக்கு ஒரு வருஷம் சிஜி வேலை இருப்பதால் ஆரம்பத்திலேயே அதை முடித்துக் கொடுத்து விட்டதாக லோகேஷ் சொல்லியிருந்தார். அதன் காரணமாகவே அதே போன்ற காட்சி ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமாரின் என்ட்ரியின் போது இடம்பெற்றதா? என்கிற கேள்வியை ரசிகர்களும் எழுப்பி இருந்தனர்.

அஜித் கதையை மாற்ற: நடிகர் அஜித்தை வைத்து லிங்குசாமி ஜீ படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ஆரம்பிக்கும் முன்பாக லிங்குசாமியிடம் அஜித்துக்கு என்ன கதை வச்சிருக்கீங்க என கேட்டதும் லிங்குசாமி சொல்லியிருக்கிறார். எல்லாம் ஓகே ஆகிடுச்சா என லிங்குசாமியிடம் ரஜினி கேட்க, இன்னும் இல்லை சார் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது எனக் கூறினாராம். அப்போது இந்த கதையை எனக்கு பண்ணினா எப்படி இருக்கும் என ரஜினி கேட்டு லிங்குசாமியையே அதிர வைத்திருக்கிறார்.

லிங்குசாமி சொன்ன விஷயம்: என் கதையில ஹீரோ காலேஜ் பாய் எப்படி சார் உங்களுக்கு மாத்த முடியும் என லிங்குசாமி ரஜினியிடம் கேட்க, அதை அப்படியே ஃபேக்டரிக்கு கொண்டு வந்து அரசியல் படமா பண்ணலாமே என கதையையே சொல்லியிருக்கிறாராம். ஆனால், அதன் பிறகு அஜித் அந்த படத்தை ஓகே சொல்ல ரஜினியை விட்டு விட்டு அஜித்தை வைத்து ஜீ படத்தை பண்ணி உள்ளார் லிங்குசாமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X