Rajinikanth wishes: தேசிங்கு பெரியசாமியை பாராட்டிய சூப்பர்ஸ்டார்.. எதுக்காக தெரியுமா?
சென்னை: ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அடுத்ததாக சிம்பு -தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகவுள்ள படம எஸ்டிஆர் 48.
இந்தப் படத்தின் அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக தன்னுடைய பிட்னசை மேம்படுத்தி வருகிறார் நடிகர் சிம்பு.
நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு அடுத்தடுத்த சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த மூன்று படங்களிலும் வித்தியாசமான ஜானர்களில் நடித்திருந்தார் சிம்பு. குறிப்பாக வெந்து தணிந்தது காடு படத்திற்காக தன்னுடைய உடலை ஏற்றி, இறக்கி மேஜிக் செய்திருந்தார். மீண்டும் பத்து தல படத்தில் உடலை ஏற்றியிருந்தார்.
சிம்புவின் எஸ்டிஆர்48 படம்: இந்நிலையில் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இணையவுள்ளார் சிம்பு. இந்தப் படத்தினை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்று திரும்பினார். தொடர்ந்து தன்னுடைய தலைமுடியை நீளமாக வளர்த்துள்ள அவரது புதிய லுக் ரசிகர்களை கவர்ந்தது.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி: இந்நிலையில் இந்தப் படத்தில் மிகவும் எனர்ஜியுடனும் விருப்பத்துடனும் நடிகர் சிம்பு நடிக்க தயாராகி வருவதாக தேசிங்கு பெரியசாமி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக அதிகப்படியான வொர்க அவுட்களை அவர் செய்து தன்னுடைய பிட்னசை படத்திற்காக அதிகப்படுத்தி வருவதாகவும் தேசிங்கு பெரியசாமி தன்னுடைய பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் போர்க்கள காட்சிகளும் அதிகமாக இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தாமதமாகும் சூட்டிங்: இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை கேட்ட சிம்பு, கதையில் எந்த மாற்றமும் கூறவில்லை என்றும் தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். அவர் மிகவும் பிரமாதமான நடிகர் என்று பாராட்டியுள்ள தேசிங்கு பெரியசாமி, படத்தின் முன் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு அதிகமான நேரம் பிடிப்பதாகவும் அதனால்தான் படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
STR48 படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து: இதனிடையே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், எஸ்டிஆர் 48 படத்திற்காக சமீபத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்ததாக தேசிங்கு பெரியசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக ஆல் தி பெஸ்ட் கூறிய சூப்பர்ஸ்டார், நல்லா பண்ணுங்க, சூப்பரா பண்ணுங்க என்று வாழ்த்து கூறியதையும் அவர் பகிர்ந்துள்ளார். ரஜினிக்காக உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டில் தற்போது சிம்பு கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











