என் வாழ்க்கையிலேயே பெரிய விருது வாங்குன மாறி இருக்கு.. ரஜினி வாழ்த்தால் நெகிழ்ந்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை: மாநாடு திரைப்படத்தில் தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டி உள்ளார்.

மாநாடு திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.

தீபாவளி ரேஸ்

தீபாவளி ரேஸ்

மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்துடன் மோத போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் மாநாடு திரைப்படம் தீபாவளி போட்டியில் இருந்து பின் வாங்கி நவம்பர் 25ம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

சிம்புவை வாழ்த்திய சூப்பர்ஸ்டார்

சிம்புவை வாழ்த்திய சூப்பர்ஸ்டார்

நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தின் வெற்றிக்காக வாழ்த்தியதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார். மாநாடு பிளாக்பஸ்டர் என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டானது.

வாழ்நாள் விருது

வாழ்நாள் விருது

என் நடிப்புக்கு என் வாழ்நாளிலேயே மிகப்பெரிய விருதை இன்று பெற்றுவிட்டது போல உணர்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் போன் பண்ணி வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியை இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தற்போது உற்சாகமடைந்துள்ளார்.

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு 'தனுஷ்' கோடி என பெயர் வைத்து வர்த்தக ரீதியாகவும் அந்த கதாபாத்திரத்தை மேக்கப் செய்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. நடிப்பு அரக்கனான எஸ்.ஜே. சூர்யா தனது அசத்தல் நடிப்பால் வேற லெவலில் மிரட்டி உள்ளார். சிம்புவுக்கு இணையாக எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகளில் தனி பிஜிஎம் போட்டு தெறிக்க வைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

மாநாடு படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு தொடர்ந்து போன் செய்து வாழ்த்தி வரும் நிலையில், சிம்பு ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகம் அடைந்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யாவையும் பல பிரபலங்கள் மற்றும் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Recommended Video

Maanadu மாஸ்! தெறிக்க விடுகிறார்..Simbu..ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil Filmibeat
உரிமத்துக்கு கிராக்கி

உரிமத்துக்கு கிராக்கி

மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகவே சிக்கலில் இருந்த நிலையில், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமைகள் மிகப்பெரிய தொகைக்கு வாங்க கடும் போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் தி லூப் என டப் செய்யப்பட்ட மாநாடு திரைப்படம் வெளியாகாமல் முன்னணி நடிகர் நடிப்பில் ரீமேக் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X