அண்ணாத்த படப்பிடிப்பு ஓவர்...விரைவில் டப்பிங் வேலைகளை துவக்குகிறார் ரஜினி

சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மிகவும் பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

Recommended Video

Rajini ன் Surprise phone call | சந்தோஷத்தின் உச்சியில் நடிகர் King Kong | Adhisaya Piravi

இதில் லேட்டஸ்ட் தகவலாக, இந்த படத்தில் ரஜினி தான் நடிக்க வேண்டிய பகுதிகள் அனைத்தையும் நிறைவு செய்து விட்டாராம். ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த ரஜினி நாளை சென்னை திரும்ப உள்ளார். விரைவில் தனக்கான டப்பிங் பேசும் பணிகளை ரஜினி துவங்க உள்ளாராம்.

கொரோனாவால் தடைபட்ட அண்ணாத்த

கொரோனாவால் தடைபட்ட அண்ணாத்த

இது பற்றி அண்ணாத்த படக்குழு வட்டாரங்கள் கூறுகையில், படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 2 மாதங்கள் அண்ணாத்த படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

ஐதராபாத்தில் தங்கிய ரஜினி

ஐதராபாத்தில் தங்கிய ரஜினி

நீண்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்டது. இதற்காக ஒரு மாதம் ரஜினி ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது ரஜினி, படத்தில் தனது பகுதிகளை நடித்து முடித்து விட்டார்.

நாளை சென்னை திரும்புகிறார் ரஜினி

நாளை சென்னை திரும்புகிறார் ரஜினி

இன்று சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட உள்ளது. இதை முடித்த பிறகு அவர் சென்னை திரும்பி விடுவார். மற்ற படக்குழுவினர் இங்கேயே இருப்பார்கள். மீதம் இருக்கும் காட்சிகளை முடித்த பிறகு இவ்வார இறுதியில் அவர்களும் சென்னை திரும்ப உள்ளனர்.

விரைவில் டப்பிங் வேலைகள்

விரைவில் டப்பிங் வேலைகள்

அடுத்த வார இறுதியில் ரஜினி டப்பிங் பேசும் வேலைகளை துவக்குவார். அதை முடித்த பிறகு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். அநேகமாக ஜூன் மாதத்தில் அவர் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா செல்லும் ரஜினி

அமெரிக்கா செல்லும் ரஜினி

ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், அவர்களின் குழந்தைகளும் அமெரிக்கா செல்ல உள்ளனர். தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடைபெற்று வருவதால், ரஜினியின் மருத்துவ பரிசோதனையுடன் தனது படப்பிடிப்பு வேலைகளையும் தனுஷ் கவனிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X