திட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு!

ரஜினியின் பேட்ட படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.

Recommended Video

பேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு- வீடியோ

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்துள்ளது. இந்தத் தகவலை ரஜினியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் 165வது படமாக உருவாகி வருகிறது பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். திரிஷா, சிம்ரன் என படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்கி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், இயக்குநர் மகேந்திரன், சசிகுமார் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

சன் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

படப்பிடிப்பு:

படப்பிடிப்பு:

இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், திட்டமிட்டதைவிட 15 நாள்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இத்தகவலை ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினி டிவிட்:

இது தொடர்பான பதிவில் அவர், "பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட 15 நாள்களுக்கு முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது. `சன் பிக்சர்ஸ்' , கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு உள்ளிட்ட படக் குழுவுக்கு நன்றி. அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்:

கார்த்திக் சுப்புராஜ்:

ரஜினியின் இந்தப் பதிவிற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அளித்துள்ள பதிலில், "நன்றி தலைவா! என் வாழ்வில் மறக்க முடியாத நாள்கள் அவை. என் கனவு நனவாகியுள்ளது. பேட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. படக்குழுவுக்கு நன்றி. தலைவர் படத்தை நான் இயக்கினேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. கனவுபோல் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

கபாலி, காலா படங்களில் வயதான தோற்றத்தில் நடித்திருந்த ரஜினி, பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. படத்தையும் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டீசர்:

டீசர்:

படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் டீசரை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய அனிருத், விரைவில் பேட்ட படத்தின் இசை வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X