Rajinikanth: பேரனால் நடந்த நல்ல விஷயம்.. உச்சகட்ட சந்தோஷத்தில் ரஜினிகாந்த்.. எல்லாம் கைகூடி வருதுபோல!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதிகளாக இருந்து, விவாகரத்து பெற்றவர்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் முதல் மகனான யாத்ரா தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர்களது பள்ளியில் நடைபெற்ற கான்வகேஷன் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் யாத்ரா என மூவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ரஜினிகாந்த் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுஷ், இவரும் நடிகர் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக உருவெடுத்தார். இவரது இயக்கத்தில் முதலில் வெளியான படமான 3 படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் உருவான வை ராஜா வை படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருந்தது. முதலில் யாத்ரா என்ற மகன் பிறந்தார். அதன் பின்னர் லிங்கா என இளைய மகன் பிறந்தார். இளைய மகனின் பெயரில் தாத்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமே நடித்தார். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவதாக, அதாவது விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தார்கள். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

Rajinikanth X Page Post About His Grandson Yathra Son in Law Dhanush and Daughter Aishwarya Rajinikanth

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து: இவர்களது விவாகரத்திற்கு பல காரணங்களை இணையவாசிகள் இட்டுக்கட்டிப் பேசி வந்தார்கள். மேலும் இருவரும் மீண்டும் இணைவதாகவும் விவாகரத்திற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததை திரும்பப் பெறப்போவதாகவும் தகவல்கள் உலா வந்தது. மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் மிகவும் போராடியதாகவும் கூறப்பட்டது. இதனால் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று பலரும் கருதினார்கள். ஆனால் இருவரும் 2024 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும், யாத்ரா மற்றும் லிங்கா என இருவரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துடன் மாறி மாறி காணப்பட்டனர். தனுஷின் குபேரா படத்தின் படப்பிடிப்பு தளத்திலும், அமெரிக்காவில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சென்ற போதும் இருவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் காணப்பட்டனர்.

ரஜினி வாழ்த்து மற்றும் நம்பிக்கை: இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து அதாவது மே 31 ஆம் தேதி மாலையில் இருந்து இணையத்திலும் கோலிவுட் வட்டாரத்திலும் வேகமாக பரவி வரும் புகைப்படம் என்றால் அது தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என இருவரும் தங்கள் மகன் யாத்ராவின் கான்கவகேஷனில் கலந்து கொண்டுள்ளனர். இருவரையும் யாத்ரா ஒருசேர கட்டிப்பிடிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "எனது பேரன் கடந்த முதல் மைல்கல், வாழ்த்துகள் யாத்ரா கண்ணா" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவைப் பார்த்த இணையவாசிகள் விவாகரத்து பெற்ற தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை தனது பள்ளி கான்வகேஷனில் ஒன்று சேர்த்துவிட்ட பேரன், அவர்களை வாழ்க்கையிலும் ஒன்று சேர்த்துவிடுவார் என்ற நம்பிக்கை ரஜினிகாந்த்திற்கு வந்துவிட்டது போல என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X