கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாயாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எப்படி காட்ட கூடாதோ அந்த அளவுக்கு அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படு சுமாராக காட்டிய நிலையில் அந்த படம் ஓடவே இல்லை.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தை எப்படி மாஸாக காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு மாஸாக வயதான தோற்றத்திலும் அனிருத் இசையில் தூள் கிளப்பும் விதமாக காட்டிய நிலையில் அந்த படம் அசால்டாக 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

Rajinikanth s 171 movie Coolie intro video trolled with Saravana Stores advertisement

லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் 171 வது படத்தை இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு வெளியானதும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாட ஆரம்பித்தனர். இந்த நிலையில், நேற்று மாலை அந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி இன்னமும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

கூலி காலி: கூலி என்கிற டைட்டிலுடன் தலைவர் 171 வது படத்தின் அறிமுக வீடியோ அட்டகாசமாக வெளியாகியுள்ளது. எந்த படத்தின் அறிவிப்பு வெளியானாலும் அதை எப்படி கலாய்க்கலாம் என ஹேட்டர்கள் விதவிதமான எடிட்களையும், அந்த படத்தின் போஸ்டர் எங்கிருந்து சுடப்பட்டது, வசனம் எங்கிருந்து எடுக்கப்பட்டது, இசை காப்பியா என பல விஷயங்களை பதிவிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்: பீஸ்ட் வேஸ்ட் என கலாய்த்த நிலையில், கூலி காலி என ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தின் மியூசிக் மற்றும் அதில் கடைசியாக வரும் வசனத்தை அப்படியே கூலி படத்தின் வீடியோவுக்கு சிங்க் செய்து அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

சரத்குமார் சம்பவம்: கோட் படத்தில் யுவன் சங்கர் ராஜா சொதப்பியது போல அனிருத் கூலி படத்தில் சொதப்பவில்லை என்றும் இந்த படத்தில் ஃபேக்கான பிளாஷ்பேக்கை லோகேஷ் கனகராஜ் வைக்க மாட்டார் என்றும் ஏகப்பட்ட விவாதங்கள் மற்றும் கிண்டல், கேலி என கூலி படத்தை சுற்றி டிரெண்டாகி வருகின்றன. எல்லாமே நல்லா இருக்கு ஆனால், விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொன்ன சரத்குமாரின் கூலி டைட்டிலை தூக்கி லோகேஷ் கனகராஜ் வச்சாரு பாரு அங்கே இருக்காரு அவர் விஜய் ஃபேன் பாய் என விஜய் ரசிகர்கள் ரகளை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X