பாட்ஷா படம் ரொம்ப பெரிய அடையாளத்தை கொடுத்துச்சி.. ரஜினியின் தம்பியாக நடித்த சசிக்குமார் வியப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கேரியரில் மிகப்பெரிய படமாக வெளியானது பாட்ஷா. ரஜினி ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ள போதிலும் அவரது கேரியர் பெஸ்ட்டாக பாட்ஷா படம் இன்றளவும் உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு சமமான கேரக்டரில் அவரது தம்பியாக நடித்திருந்தார் கன்னட நடிகர் சசிக்குமார்.

ரஜினி வில்லன்களை துவம்சம் செய்த நிலையில், போலீஸ் அதிகாரியாக, ரஜினியை கேள்வி கேட்கும் சசிக்குமாரின் நடிப்பு இன்றளவும் பாராட்டுக்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்த டயலாக், தமிழ் சினிமாவின் முக்கியமான டயலாக்காக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றளவும் பல மீம்ஸ்களுக்கு இந்த டயலாக்கை ரசிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Rajinikanth Baasha Shashi kumar


பாட்ஷா படம்: நடிகர் ரஜினிகாந்த் கேரியரில் பெஸ்டான படமாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் பாட்ஷா. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். 1995ம் ஆண்டில் வெளியான இந்த படம் தற்போது வரை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய படமாக காணப்படுகிறது. இந்த படத்தில் தன்னுடைய தம்பி, தங்கைகளுக்காக தன்னுடைய வாழ்க்கை பாதையை மாற்றி கொள்பவராக ரஜினி நடித்திருந்தார். மாணிக்கமாக ஆட்டோ ஓட்டுநராக வாழ்ந்து வரும் ரஜினிக்கு அதிரடியான ஒரு கேங்ஸ்டர் பிளாஷ்பேக் இந்த படத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

ரஜினியின் கேரியர் பெஸ்ட் படம்: அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணத்தையும் மிகவும் வலிமையாக படத்தில் சுரேஷ் கிருஷ்ணா பதிவு செய்திருந்தார். இது போன்ற மற்றொரு படம் ரஜினிக்கு அமையுமா என்பது கேள்விக்குறி. கேங்ஸ்டர் படங்களில் ரஜினிகாந்த் அடுத்தடுத்து நடித்துள்ள போதிலும் பாட்ஷாவின் வெற்றியை முறியடிக்க முடியவில்லை. ரஜினிகாந்தின் தம்பியாக படத்தில் பிரபல கன்னட நடிகர் சசிகுமார் நடித்திருந்தார். இந்தக் கேரக்டரில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ரஜினிகாந்த்தான் பரிந்துரைத்ததாக சசிகுமார் தற்போது தெரிவித்துள்ளார்.

தம்பியாக நடித்த சசிக்குமார்: பல கன்னட படங்களில் பிஸியாக நடித்து வந்த போதும் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது என்றும் அந்த வாய்ப்பை தான் மிஸ் செய்ய விரும்பவில்லை என்றும் மிகவும் உற்சாகத்துடன் இந்த படத்தில் நடித்ததாகவும் சசிகுமார் தற்போது தெரிவித்துள்ளார். பாட்ஷா படத்தில் ரஜினிக்கு இணையாக பைட் காட்சிகளும் சசிக்குமாருக்கு அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ரஜினியிடம் சசிக்குமார் கேள்வி எழுப்பும் காட்சிதான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.


ரஜினி குறித்து பாராட்டு: பாட்ஷா என்ற மிகச்சிறப்பான படத்தில் நடித்திருந்த சசிகுமாருக்கு தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததாகவும் ஆனால் கன்னடத்தில் அந்த நேரத்தில் தான் மிகவும் பிஸியாக இருந்ததால் தமிழ் படங்களை கமிட் செய்ய முடியவில்லை என்றும் சசிகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 1980களில் வில்லனாகவே இவர் கன்னட படங்களில் தன்னுடைய கேரியரை துவங்கியுள்ளார். தொடர்ந்து ஹீரோவாகவும் நடித்துள்ள சசிகுமார் மிகச்சிறந்த டான்ஸர் ஆகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாருக்கான எந்த விஷயத்தையும் கடைபிடிக்க மாட்டார் என்றும் மிகவும் எளிமையானவர் என்றும் சக நடிகர்களுடன் உட்கார்ந்து காபி, டீ குடிப்பவர் என்றும் சசிகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அடையாளத்தை கொடுத்த படம்: தற்போதும் தமிழ்நாட்டில் பாட்ஷா படம்தான் தனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுதது வருவதாக சசிக்குமார் கூறியுள்ளார். தற்போதும் ரசிகர்கள் பொது இடங்களில் தன்னை அடையாளம் கண்டுபிடித்து பாராட்டு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்ததாக தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் நடிப்பிற்கு மொழி தடையாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X