4 வயசில் அனாதையா நின்ற ரஜினி.. பயங்கரமா அடிச்சேன்..கண்கலங்கிய அண்ணன் சத்யநாராயணன்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகமே கொண்டாடும் நடிகராக இருக்கிறார். ஜெயிலர் படத்தின் மகத்தான வெற்றிக்கு பின் இந்த காலத்து வண்டு செண்டுகளும் ரஜினியின் தீவிர ரசிகராக மாறி உள்ளனர்.

ஆகஸ்ட் 10ந் தேதி வெளியான ஜெயிலர் படம் இரண்டு வாரத்தில் 525 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது.

Rajinikanths brother Sathyanarayanan shared rajini childhood memory

ஜெயிலர் படத்தின் வெற்றியால் ரஜினி மட்டுமில்லாமல், ரஜினி அண்ணன் சத்யநாராயணனும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

சத்யநாராயணன் பேட்டி: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரஜினிகாந்த் அண்ணன் ரஜினி குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார். அதில்,எங்க அப்பா, அம்மாவிற்கு நாங்க நான்கு பேர் முதலில் ஒரு அக்கா, அடுத்து நான் சத்யநாராயணன், அடுத்து நாகேஷ்வர் ராவ் நாலாவது தான் சிவாஜி ராவ். அவருக்கு நான்கு வயசு இருக்கும் போதே அம்மா இறந்துவிட்டார்.

அனாதையாக இருந்தார்: அம்மா இறந்ததும் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். அந்த நான்கு வயசுல ரஜினி அனாதையாக இருந்தாரு. என் சித்தப்பாவிற்கு திருமணமாகாததால், ரஜினியை நான் வளர்த்துக்கொள்கிறேன் என சித்தப்பா எடுத்துச்சென்று நன்றாக வளர்த்தார். ரஜினிக்கு 22 வது வயதில் கான்ஸ்டபிள் வேலை கிடைத்தது.

Rajinikanths brother Sathyanarayanan shared rajini childhood memory

கண்டக்டர் வேலை: அப்போது தான் எனக்கு திருமணம் நடந்தது, 20வயதில் ஒரு மகன் என 35வயதில் எனக்கு 5 குழந்தைகள். எனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் ரஜினி தான் என் முதல்குழந்தை. குடும்பம் பெரிதாகி விட்டதால், குடும்பத்திற்காக கண்டக்டர் வேலைக்கு சென்றார். அப்போது தான் ரஜினிக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும், குடிக்கும் பழக்கமும் வந்தது. இது எல்லாம் செய்யக்கூடாது என்று பலமுறை கண்டித்தாலும், அவர் அந்த பழக்கத்தைவிடவில்லை.

அவர் தான் சூப்பர் ஸ்டார்: இந்த நேரத்தில்தான் பத்திரிக்கையில் சென்னையில் பிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிப்பதை பார்த்துவிட்டு சென்னை வந்தார். அதன்பிறகு கே பாலச்சந்தரின் அபூர்வராகங்கள் படத்தில் அந்த கதவை திறக்கும் காட்சியில் நடித்தார். அந்த காட்சியில் தியேட்டரில் கை தட்டல் பறந்தது அதை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன். அதே போல, சூப்பர் ஸ்டார் பட்டத்தை மக்கள் அவருக்கு கொடுத்தது, இதனால், என்னைக்குமே ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று சத்யநாராயணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X