Good Bad Ugly vs Coolie: குட் பேட் அக்லியின் சோலியை முடித்த கூலி.. டிரெண்டிங்கில் டாப் யாரு தெரியுமா?

சென்னை: அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் டிரெய்லரை வெளியிடுவார்கள் என்றும் அஜித் ரசிகர்கள் எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை என்றாலும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று சன் பிக்சர்ஸ் செய்த சம்பவத்தால் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், பூஜா ஹெக்டே, ஸ்ருதிஹாசன், செளபின் சாஹீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth s Coolie beats Ajith Kumar s Good Bad Ugly in social media trending

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குட் பேட் அக்லியை கீழே இறக்கிவிட்டு டிரெண்டிங்கில் டாப்பில் தலைவர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

குட் பேட் அக்லி டிரைலர் வருமா? வராதா?: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், 2வது சிங்கிளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதி படமே வெளியாகவுள்ள நிலையில், இன்னமும் டிரைலர் குறித்த அறிவிப்பை மட்டும் படக்குழு வெளியிடவில்லை. இன்று கண்டிப்பாக குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் வந்துவிடும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் குறித்து அதிகமாக ரிவீல் செய்ய வேண்டாம் என படக்குழு திட்டமிட்டு டிரைலர் ரிலீஸ் செய்யாமல் டைரக்ட்டாக படத்தை வெளியிடப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

டிக்கெட் புக்கிங்: இன்று இரவு 8 மணிக்கு மேல் குட் பேட் அக்லி படத்தின் டிக்கெட் புக்கிங் இந்தியா முழுவதும் ஆரம்பித்துவிடும் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், செம டிமாண்டாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் குமாரின் வாழ்நாளில் இதுவரை எந்த படமும் ஈட்டாத வசூலை குட் பேட் அக்லி படம் அள்ளிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுக்கே வந்த கூலி: குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்கிற நம்பிக்கையுடன் அஜித் ரசிகர்கள் #GoodBadUglyFromApril10 என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், ரஜினிகாந்தின் கூலி படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் திடீரென அறிவித்த நிலையில், சோஷியல் மீடியாவில் Coolie ஹாஷ்டேக்கை ரஜினிகாந்த் ரசிகர்கள் டிரெண்ட் செய்து முதலிடத்தில் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

அஜித் ரசிகர்கள் அப்செட்: குட் பேட் அக்லி ஹாஷ்டேக் டிரெண்டிங் சரிவை சந்தித்த நிலையில், அஜித் ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகியுள்ளனர். மேலும், குட் பேட் அக்லி டிரைலர் வருமா? வராதா? என்பதும் அவர்களை கொண்டாட்ட மன நிலைக்குள் கொண்டு செல்லவில்லை. கூலி படத்தின் டீசருடன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டால் இன்று கூலி சம்பவம் தான் என தலைவர் ரசிகர்கள் தாறுமாறு செய்து வருகின்றனர். இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டும் இண்டஸ்ட்ரி ஹிட் படமாகவும் குட் பேட் அக்லி மாறாது என்றும் கூலி தான் முதலிடத்தை பிடிக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X