Coolie Day 1 Box Office - கூலி முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?.. அலறிய பாக்ஸ் ஆஃபிஸ்.. படம் மாஸ் காட்டிருச்சே
சென்னை: ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அனைவரும் எதிர்பார்த்து படத்துக்கு சென்றார்கள். ஆனால் அனைவரையுமே படம் கவரவில்லை. அதேசமயம் ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு படம் அளவுக்கு அதிகமாகவே பிடித்திருக்கிறது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளான நேற்று கூலி செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியிருக்கின்றன.
திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக ஜொலித்துவருபவர் ரஜினி. 74 வயதான அவர் இளைய தலைமுறை இயக்குநர்களுடன் பணியாற்றவே இப்போது அதிகம் விரும்புகிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கூலி படத்தில் பணியாற்றினார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான இப்படத்தில் ஏகப்பட்ட ஸ்டார்கள் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
நேற்று ரிலீஸான படம்: படமானது நேற்று உலகம் முழுவதும் ஐந்தாயிரம் ஸ்க்ரீன்களில் வெளியானது. ஏற்கனவே ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் வசூல் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. எக்கச்சக்க ஆவலோடு படம் பார்க்க தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்கள்; நேற்றைய நாளை ஒரு திருவிழா போல் மாற்றிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கு திரும்பினும் கூலி, ரஜினிகாந்த்தை வாழ்த்திதான் கோஷங்கள் இருந்தன.

எப்படி இருக்கிறது படம்?: ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்களுக்கு படம் ஓகேதான். அவர் ஸ்டைல், எனர்ஜி, டயலாக் பேசும் விதம், இந்த வயதிலும் செய்யும் நடனம், சண்டை காட்சி என அத்தனையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். படத்தை ஒற்றை ஆளாக தன்னுடைய தோள்களில் சுமந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் அவருக்கு அடுத்ததாக சௌபின் சாஹிரும், நாகார்ஜுனாவும் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார்கள்.
வீக் திரைக்கதை: ஆனால் இதையெல்லாம் தவிர்த்து பார்த்தால் படத்தில் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பழிவாங்குதல் என்ற காலங்காலத்துக்கும் அடித்து துவைத்துவிட்ட ஒன்லைனைத்தான் லோகி கதையாக டெவலப் செய்திருக்கிறார். சரி அதையாவது ஒழுங்காக செய்தாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஸ்லோவான, கணிக்கக்கூடிய ஸ்க்ரீன் ப்ளே,வழக்கமான கடத்தால் ஜானர் என அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
பாக்ஸ் ஆஃபிஸ்: இப்படி விமர்சன ரீதியாக படம் அடி வாங்கினாலும் ஃபர்ஸ்ட் ஷோ போடப்பட்டதிலிருந்து வசூலை படம் அள்ள தொடங்கிவிட்டது. முதல் ஷோ முடிவில் இந்தியாவில் மொத்தம் 26 கோடி ரூபாயை வசூலித்ததாக Sacnilk வலைதளம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாளில் படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்ற விவரத்தை அந்த வலைதளம் தெரிவித்திருக்கிறது. அதன்படி நேற்று மட்டும் மொத்தம் இந்தியாவில் 65 கோடி ரூபாயை வசூலித்திருக்கும் என்று கூறியுள்ளது.
கூலி திரைப்படம் தமிழில் 45 கோடி ரூபாயும், தெலுங்கில் 15 கோடி ரூபாயும், தெலுங்கில் 4.5 கோடி ரூபாயும், ஹிந்தியில் 0.5 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











