Coolie First Review: கூலி முதல் விமர்சனம்.. சூப்பர் ஸ்டார் படம் சூப்பரா? சுமாரா?.. என்னங்க சொல்றீங்க!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் தொடர்பான விமர்சனத்தை இப்போதே இன்சைட் ரிப்போர்ட் என நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு படத்துக்கும் யாராவது இப்படி படம் வெளியாவதற்கு முன்பே விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
படம் வெளியான பின்னர் தான் அந்த விமர்சனம் உண்மையா? அல்லது பொய்யா? என்றே ரசிகர்களுக்குத் தெரிய வரும். தற்போது அலெக்ஸ் என்பவர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள விமர்சனம் ஒன்று வைரலாகி வருகிறது.

இன்சைட் ரிப்போர்ட் என கூலி படம் குறித்து அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
கூலி முதல் விமர்சனம்: கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் சூப்பராக குக் செய்துள்ளார் என்றும் கபாலி படத்துக்குப் பிறகு ரஜினிகாந்தின் நடிப்புக்கு இந்த படம் செமத்தியான தீனிப் போட்டுள்ளது என அலெக்ஸ் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூலி படத்துக்கான முதல் விமர்சனம் என ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். நாகார்ஜுனா தான் படத்துக்கு முதுகு தண்டு என்றும் அவரை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் தான் படத்தை மொத்தமாக தாங்கப் போகிறது என்றும் அமீர்கான் கேமியோ வரும் சீன் தியேட்டர்களை ஸ்டேடியம் ஆக்கிவிடும் என்றும் இன்னொரு பெரிய சர்ப்ரைஸ் கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியாமல் லோகி ஒளித்து வைத்திருக்கிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.
நாகார்ஜுனா மெயின் வில்லன் கிடையாது: மேலும், கூலி படத்தின் மெயின் வில்லனே சைமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா தான் என படக்குழு சொல்லி வரும் நிலையில், நாகார்ஜுனா மெயின் வில்லன் கிடையாது என்றும் மெயின் வில்லன் யார் என தெரியும் போது பயங்கர சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்று கூறுகின்றனர். சத்யராஜ் தான் படத்தில் மெயின் வில்லனாக இருப்பார் என்றும் ரசிகர்கள் கெஸ் செய்து வருகின்றனர்.
கூலி பந்தயம் அடிக்கும்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக மாறிவிடும். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமே சன் பிக்சர்ஸுக்கு லாபகரமான படம் தான் என பாண்டிராஜ் சமீபத்தில் கூறியிருந்தார். ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்துள்ள நிலையில், மீண்டும் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்துக்கு இந்த முறை இன்னொரு காஸ்ட்லி கார்கள் பரிசாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் தாண்டி கலாநிதி மாறன் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள கூலி படம் ஐமேக்ஸ் ஃபார்மேட்டில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வார் 2 படம் ஐமேக்ஸ் தியேட்டர்களை ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











