ரஜினியின் கூலி.. இவர்களெல்லாம் படம் பார்க்க தடை.. தியேட்டர்கள் காட்டிய அதிரடி.. போஸ்டரே அடிச்சிட்டாங்க
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸாகவிருக்கிறது. கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படமாக இது மாறியிருக்கிறது. நிச்சயம் 1000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்பது பெரும்பாலானோரின் கணிப்பாக இருக்கிறது. அதேசமயம் ட்ரெய்லருக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதன்முறையாக ரஜினியும், லோகேஷும் இணைந்திருப்பதன் காரணமாக இப்படத்தின் மீது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. கமலுக்கு எப்படி விக்ரம் படத்தை மெகா ப்ளாக் பஸ்டராக கொடுத்தாரோ அதே போன்றொரு வெற்றியை இப்படத்திலும் கொடுக்க காத்திருக்கிறார் லோகி.
ட்ரெய்லர் எப்படி?: படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்துகொண்டது. அனைவருமே ரஜினிகாந்த்தை புகழ்ந்து பேசினார்கள். ரஜினிகாந்த்தும் தனது பங்குக்கு தன்னுடைய பேச்சை அட்டகாசமாக பேசியிருந்தார். லோகேஷ், நெல்சன் திலீப்குமார் என பலரையும் கலாய்த்து தள்ளிவிட்டார் என்று குறிப்பிடத்தக்கது. அன்றைய தினமே ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. ட்ரெய்லருக்கு சுமாரான வரவேற்புதான் கிடைத்தது.

என்ன கதை?: இந்தப் படத்தின் அறிவிப்பு வந்தபோதிருந்தே கதை குறித்த தங்களது யூகங்களை ரசிகர்கள் வெளியிட தொடங்கினார்கள். லோகேஷின் வழக்கமான ஜானரான கடத்தல், கொலை போன்றவற்றில்தான் கதை பயணிக்கும் என கணித்தனர். ஆனால் ட்ரெய்லரை பார்க்கையில் சத்யராஜின் நண்பர் ரஜினிகாந்த் என்பதும்; தனது நண்பரை கொலை செய்தவர்களை ரஜினி பழி வாங்குகிறார் என்பதும் உறுதியாவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
படத்துக்கு A சர்ட்டிஃபிக்கேட்: சாதாரண லைனாக இருந்தாலும் மேக்கிங்கில் லோகேஷ் கனகராஜ் பட்டையை கிளப்பிவிடுவார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. படத்தின் ரன்னிங் டைம் 169 நிமிடங்கள் ஆகும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். அத்தனை நிமிடங்கள் ரசிகர்களை சலிப்பு தட்டாமல் உட்கார வைத்துவிட வேண்டும். அதை லோகி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இது ஒருபக்கம் இருக்க படத்துக்கு சென்சாரில் A சர்ட்டிஃபிக்கேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தியேட்டர்களின் அதிரடி அறிவிப்பு: பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் படம் A சர்ட்டிஃபிக்கேட் பெறுவது இதுதான் என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் படத்துக்கு சென்சார் ஏ சான்றிதழ் கொடுத்திருப்பதால் பிவிஆர், ஏஜிஎஸ் ஆகிய தியேட்டர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்க்கக்கூடாது என்று போஸ்டர்களையும் வெளியிட்டிருக்கின்றன. மீறி அவர்களை அழைத்து வந்தால் கண்டிப்பாக தியேட்டருக்குள் விடமாட்டோம் என்றும்; டிக்கெட் பணமும் திருப்பி தரப்படாது என்றும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றன. அதுமட்டுமின்றி வயது சான்றிதழையும் கொண்டு வருமாறு அறிவுறுத்தவும் செய்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











