Coolie vs Leo Box Office - லியோ வசூலை முந்தியதா கூலி?.. முதல் நாளில் உலகளவில் கூலி கலெக்‌ஷன் இத்தனை கோடியா?

சென்னை: கூலி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. அதேசமயம் ரஜினியின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கும் சூழலில் லியோ படத்தின் முதல் நாள் வசூலையும், கூலி படத்தின் முதல் நாள் வசூலையும் ரசிகர்கள் கம்ப்பேர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்கள் வரிசையாக ரஜினிக்கு தோல்வியை கொடுத்தன. அதன் காரணமாக அவரது சூப்பர் ஸ்டார் பட்டம் பறிபோயிவிடும் என்று பலரும் கூறினார்கள். அதுமட்டுமின்றி அந்த இடத்துக்கு விஜய்யை முன் நிறுத்தினார்கள் அவரது ரசிகர்கள். இதனால் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் எழுந்து வந்தது. இப்போது பெரிய பஞ்சாயத்து எதுவும் ஓடுவதில்லை.

கூலி ரிலீஸ்: இப்படிப்பட்ட நிலைமையில் அவர் ஜெயிலர், வேட்டையன் படங்களுக்கு பிறகு கூலி படத்தில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இரண்டு படங்கள் செய்தவர். அவற்றில் ஒன்று வெற்றி; இன்னொன்று ஓகே ரகம். அவருடன் ரஜினி முதன்முறையாக சேர்ந்திருப்பதால் நேற்று படமானது உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் கூலி ரிலீஸானது. ரசிகர்களும் ஆர்வத்தோடு படம் பார்க்க சென்றார்கள்.

Rajinikanth s Coolie has collected more at the box office than Leo did on the first day
Photo Credit:

இதுவும் சுமார்தான்: ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பெரிய திருப்தியை படம் கொடுக்கவில்லை. வழக்கமான லோகேஷ் கனகராஜின் கடத்தல் ஜானரில் நண்பரின் கொலை; அதற்கு பழி வாங்கும் ஹீரோ போன்ற பழைய விஷயங்கள் சேர்ந்து கூலியாக வந்தது. திரைக்கதையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை; பின்னணி இசையும் பெரிதாக இல்லை. இதனால் இப்படம் சுமார் ஹிட்தான் என்ற ரிசல்ட்டைத்தான் பெற்றிருக்கிறது.

வசூலில் சூப்பர்: அதேசமயம் முதல் நாள் வசூலில் படம் சக்கைப்போடு போட்டுவிட்டது. டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே நூறு கோடி ரூபாய் வசூலை நெருங்கியது. நேற்று ரிலீஸான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 65 கோடி ரூபாயும், உலக அளவில் 170 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

விஜய்யை வென்ற ரஜினி?: அதே மகிழ்ச்சியோடு அவர்கள் இன்னொரு வேலையையும் செய்துவருகிறார்கள். அதாவது லியோ படத்தின் முதல் நாளின் வசூலையும், கூலியின் முதல் நாள் வசூலையும் ஒப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்படி விஜய்யின் லியோ ரிலீஸான முதல் நாளில் உலக அளவில் 148 கோடி ரூபாயை வசூலித்தது. ஆனால் கூலி படமோ முதல் நாளில் 170 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த ரஜினியின் ரசிகர்களோ எப்போதுமே விஜய்யைவிட ரஜினிதான் டாப் என்பதை மீண்டும் எங்கள் தலைவர் நிரூபித்துவிட்டார் என்று கூறிவருகிறார்கள்.

அதற்கு தளபதியின் ரசிகர்களோ, லியோ படம் முதல் நாளில் இந்தியாவில் 79 கோடிகளையும் கூலி 65 கோடிகளையும் வசூலித்திருக்கிறது. இதிலிருந்தே இந்தியாவில் விஜய்தான் டாப் என தெரிந்துகொள்ளலாம் என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X