Coolie Box Office - கூலி முதல் ஷோ ஓவர்.. இதுவரை இத்தனை கோடி கலெக்ஷனா?.. ரஜினி மாஸ் காமிச்சிட்டாரா?
சென்னை: கூலி திரைப்படம் இன்று வெளியாகி ரஜினி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேசமயம் பொதுவான ரசிகர்களுக்கு படம் கனெக்ட் ஆகவில்லை. ஆனால் அவர்களும்கூட ரஜினியின் நடிப்பை கொண்டாடிவருகின்றனர். ஏற்கனவே ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் 100 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்ட சூழலில்; இதுவரை படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த தகவல் கிடைத்திருக்கிறது.
ரஜினியும், லோகேஷும் இணைந்து கூலி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை தான் இயக்கிய படங்களில் பெரிய தோல்வி எதையும் சந்திக்காத இயக்குநர் லோகேஷ். ரஜினியும் இளம் இயக்குநர்களுடன் ஃபுல் ஃபார்மில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அப்படி இருக்கையில் இவர்கள் இரண்டு பேரும் முதன்முறையாக சேர்ந்திருந்ததால் படத்துக்கு இமயமலை அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தன.
வசூல் வேட்டை: படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங் தொடங்கியபோதே ரஜினிகாந்த்தின் மாஸ் என்னவென்று இந்திய திரையுலகம் புரிந்துகொண்டது. கேரளாவில் ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட் விற்றது; தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்னல் வேகத்தில் ஹவுஸ்ஃபுல் ஆனது என; ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் மட்டும் மொத்தம் 100 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாக கூறப்பட்டது.

படத்துக்கு விமர்சனம்: இன்று அறிவித்தபடி படம் ரிலீஸானது. நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்த சந்தோஷத்தில் தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள் ரசிகர்கள். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டது. அதேசமயம் பொதுவான ரசிகர்கள் படம் ஒன்றும் பெரிதாக இல்லை என்ற விமர்சனத்தைத்தான் முன்வைக்கிறார்கள். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட் ஆகியிருப்பதாகவே இன்டஸ்ட்ரியில் பேச்சுக்கள் ஓடுகின்றன.
என்ன மைனஸ்?: இந்தப் படமும் வழக்கமான லோகேஷ் கனகராஜின் கடத்தல் ஜானரிலும், பழி வாங்கும் படலத்திலும்தான் நகர்கிறது. முக்கியமாக படத்துடைய ஸ்க்ரீன்ப்ளே ரொம்பவே சொதப்பிவிட்டதாகவும்; க்ளைமேக்ஸ் காட்சியெல்லாம் இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம் என்று பலரும் சொல்கிறார்கள். இருப்பினும் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு முதல் நாள் வசூலை நன்றாகவே காப்பாற்றியிருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை எவ்வளவு வசூல்?: பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை அளிக்கும் Sacnilk இணையதளம் கூலி திரைப்படம் முதல் நாளான இன்று இதுவரை எவ்வளவு வசூலித்திருக்கிறது என்ற விவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் மொத்தம் 28.33 கோடி ரூபாயை கூலி கலெக்ட் செய்திருக்கிறதாம். இன்றைய நாள் முடிவில் இந்த தொகை 50 கோடி ரூபாயாக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆக உலகம் முழுவதும் எடுத்துக்கொண்டால் ஃபர்ஸ்ட் நாள் வசூல் 100 கோடி ரூபாயை நெருங்கிவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.மேலும் 2.0 படத்தின் முதல் நாள் வசூல் சாதனையையும் கூலி முறியடித்துவிடும் என்று பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் சுமார் வரவேற்புதான்: மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருக்கிறது என்றும்; ஹிந்தி பக்கம் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை; அதற்கு காரணம் வார் 2 படமும் இன்று ரிலீஸாகியிருப்பதுதான் எனவும் திரைத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் வசூலை பொறுத்தவரை வார் 2வைவிடவும் கூலிதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











