லெஜண்ட் அண்ணாச்சிக்கு அடுத்துதான் ரஜினியின் கூலி.. ப்ளூ சட்டை மாறன் விடாமல் அடிக்கிறாரே
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் ரிலீஸ். டிக்கெட் புக்கிங் தொடங்கி இந்தியா முழுவதும் பட்டையை கிளப்பிவருகிறது. தமிழ்நாட்டில் புக்கிங் தொடங்கி சில மணீ நேரத்திலேயே புக் மை ஷோ சர்வர் க்ராஷ் ஆனது. இப்படி பல விதங்களில் படத்தின் மீது ஹைப் ஏறியிருக்கும் சூழலில் ப்ளூ சட்டை மாறன் கூலியை செய்துவிட்டார்.
கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தபோதே; இவர் ரஜினியுடன் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பெரும்பாலானோரின் எண்ணமாக இருந்தது. அதற்கேற்றபடி இரண்டு பேரும் சந்தித்தார்கள். இருப்பினும் அப்போது இந்தக் கூட்டணி இணையவில்லை. லோகி லியோ திரைப்படம் செய்தார். ரஜினி ஜெயிலர், வேட்டையன் படங்களில் நடித்தார்.
கூலி கூட்டணி: லியோ படம் தோல்வியை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க ரஜினியும், லோகேஷும் கூலி படத்தில் இணைந்தார்கள். நினைத்தது நடந்துவிட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்க; படப்பிடிப்பும் மும்முரமாக நடந்தது. அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திர, ஸ்ருதிஹாசன் என பலர் படத்துக்குள் வந்தார்கள். அனிருத் வழக்கம்போல் இசையமைக்கிறார்.

வெளியான ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. ட்ரெய்லருக்கு ஆரம்பத்தில் சுமாரான வரவேற்பே கிடைத்தாலும் போகப்போக நன்றாக பிக்கப் ஆனது. இது ஒருபக்கம் இருக்க படத்தின் இரண்டு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சில நாட்களுக்கு முன்பு படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியது. அப்போது கேரளாவில் ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட் விற்பனையானதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நிலை: கேரளா போன்றே தமிழ்நாட்டிலும் ரெஸ்பான்ஸ் மாஸாகத்தான் இருக்கிறது. புக்கிங் தொடங்கி சில மணி நேரத்திலேயே புக் மை ஷோ சர்வர் க்ராஷ் ஆனது. அதேபோல் பிற மாநிலங்களிலும் டிக்கெட் புக்கிங் ஜோர்தான். இப்படி ஏகப்பட்ட வழிகளில் கூலி படம் அளவுக்கு மீறி ஹைப்பை ஏற்றிக்கொண்டிருக்கிறது. இதனால் படக்குழுவுக்கும், சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருக்கும். ரிசல்ட் என்னவென்று 14ஆம் தேதி தெரிந்துவிடும்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் எந்தப் படத்தின் டீசர்களும், ட்ரெய்லர்களும் எவ்வளவு பார்வைகளை பெற்றன என்பது குறித்த லிஸ்ட்டை பகிர்ந்திருக்கிறார். அதில் மாஸ்டர் பட டீசர் 8 கோடி பார்வைகளையும், லியோ ஏழு கோடி பார்வைகளையும், துணிவு 6.7 கோடி பார்வைகளையும், பீஸ்ட் 5.8 கோடி பார்வைகளையும் பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்..
மேலும் தி லெஜண்ட் 3.3 கோடி பார்வைகளை பெற்றிருப்பதாகவும்; அதற்கு பிறகு கூலி இதுவரையிலேயே 2.1 கோடி பார்வைகளை பெற்றிருக்கிறது. லெஜண்ட் அண்ணாச்சிக்கு அடுத்த இடத்தில் தலீவர்" என ரஜினிகாந்த்தை சீண்டியிருக்கிறார். இந்த ட்வீட் ரஜினி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











