ரஜினியின் கூலியில் நடிக்க விருப்பமா?.. கிடைத்திருக்கும் செம வாய்ப்பு.. யூஸ் செஞ்சுக்கோங்க

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில்; அந்தப் படத்தில் நடிப்பதற்கான ஆடிஷன் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து ஜெயிலர் படமும், கெஸ்ட் ரோலில் நடித்து லால் சலாம் படமும் கடைசியாக வெளியாகின. இவற்றில் ஜெயிலர் மெகா ஹிட்டானது. ஆனால் லால் சலாமோ வழுக்கி விழுந்துவிட்டது. இதற்கிடையே ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினிகாந்த். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Rajinikanths Coolie Movie Audition Was Start Now Here are the full details

வேட்டையன் ரிலீஸ்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோ நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171: இதற்கிடையே கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து அவர் இயக்கிய லியோ படம் சறுக்கியது. சூழல் இப்படி இருக்க ரஜினியை வைத்து படம் இயக்க கமிட்டானார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. நிச்சயம் கமலுக்கு கொடுத்த மெகா ஹிட் போலவே இந்தப் படத்தை ரஜினிக்கு கொடுக்க லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார்.

லோகி விஷன்: ரஜினியை வைத்து எப்படிப்பட்ட படத்தை லோகேஷ் கொடுக்கப்போகிறார் என்ற ஆவல் கோலிவுட்டில் இருக்கிறது. இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்த லோகேஷ், 'நான் கமலின் தீவிர ரசிகராக இருந்தாலும் ரஜினியின் படங்களையும் ஓபனிங் டே ஓபனிங் ஷோ பார்ப்பேன். ரஜினிகாந்த்தை நான் ஒரு விஷனில் பார்க்கிறேன். அப்படித்தான் இந்தப் படமும் இருக்கும். முழுக்க முழுக்க இது ஒரு எக்ஸ்பெரிமெண்ட்டல் படம்தான்" என்றிருந்தார். இதனால் கண்டிப்பாக இந்தப் படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆடிஷன் தொடக்கம்: இந்நிலையில் கூலி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது படத்துக்கு தேவைப்படும் சில கதாபாத்திரங்களுக்கான ஆடிஷன் தொடங்கியுள்ளது. அதுதொடர்பான அறிவிப்பில் ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடங்கள்வரை ஆடிஷனுக்கு ஏற்ற வீடியோ க்ளிப்பிங்குகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படம், முகவரியுடன் அனுப்ப வேண்டும் என்றும்; இன்ஸ்டாகிராம் ரிலீஸ் வீடியோக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X