ரஜினிகாந்த்தின் கூலி.. மாற்றப்பட்டது பெயர்.. என்ன காரணம் தெரியுமா?.. இது என்ன புதுசா இருக்கே

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். ஆகஸ்ட் 14ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் மீது ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில்; மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி மேற்கொண்டு அதனை அதிகரித்திருக்கிறது. கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் கொண்டிருக்கிறார்கள். படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகவிருக்கிறது. அதனை டி.ராஜேந்தர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்த கையோடு ரஜினிகாந்த்துடன் லோகேஷ் கனகராஜ் இணைவார் என்று பேசப்பட்டது. ரஜினியும் லோகேஷை நேரில் அழைத்து அந்தப் படத்தை பற்றி பாராட்டியிருந்தார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் இணையாமல் இருந்தார்கள். ஒருவழியாக கூலி படத்தில் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

அத்தனை நடிகர்கள்: இந்தப் படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான், ஸ்ருதிஹாசன், அபிராமி என பலர் நடிக்கிறார்கள். இதில் சத்யராஜ் மட்டும்தான் ரஜினிகாந்த்துடன் ஏற்கனவே நடித்திருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் முதன்முறையாக அவருடன் நடிக்கிறார்கள். எனவே அவர்களுடனான கெமிஸ்ட்ரி ரஜினிக்கு எப்படி இருக்கும் என்பது குறித்தும்; சத்யராஜ் நடிப்பில் எந்தவிதமான பெர்பார்மன்ஸை கொடுக்கப்போகிறார் என்பது குறித்தும் ஆவல் அதிகரித்திருக்கிறது.

Rajinikanth s Coolie movie has been titled Majdoor in Hindi
Photo Credit:

லோகேஷும் ஸ்பெஷல்தான்: அதேபோல் இந்திய அளவில் இப்போது டாப் 10 இயக்குநர்களுக்குள் லோகேஷ் கனகராஜும் இருக்கிறார். அவர் இயக்கிய மாநகரம் முதல் விக்ரம்வரை அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஆனால் விஜய்யை வைத்து அவர் கடைசியாக இயக்கியிருந்த லியோ படம் மட்டும்தான் சுமார் ரகத்தில் சேர்ந்தது. முக்கியமாக கடுமையான ட்ரோலையும் விமர்சனத்தையும் சந்தித்தது. இதன் காரணமாக தன்னை விமர்சித்தவர்களுக்கு கூலி படத்தின் மூலம் செம கூலி கொடுக்க காத்திருக்கிறார் அவர்.

என்ன எதிர்பார்ப்பு?: இதையெல்லாம் தாண்டி ரஜினிகாந்த்துடன் முதன்முறையாக சேர்ந்திருக்கிறார் லோகேஷ். அவர் கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகர் என்றாலும் ரஜினியையும் அவர் ரசித்து வந்திருக்கிறார். தனக்கு ரஜினி நடித்த கேரக்டர்களிலேயே தளபதி படத்தில் அவர் ஏற்றிருந்த தேவா கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும் என தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்திலும் ரஜினி ஏற்றிருக்கும் கேரக்டரின் பெயர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கண்டிப்பாக ஃபேன் பாய் சம்பவம் இருக்கும் என இரண்டு பேரின் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

நாளை ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க நாளை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவிருக்கிறது. அந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். முதன்முறையாக ரஜினிக்கு ராஜேந்தர் பாடியிருப்பதால் இந்தப் பாடல் மீது உச்சக்கட்ட ஆவலை வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் புதிய ட்விஸ்ட் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

பெயர் மாற்றம்: அதாவது இந்தப் படமானது பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. தமிழ் போல்வே தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கூலி என்கிற பெயரில்தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஹிந்தியில் வேறு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மஜ்தூர் என்ற் பெயரில் ஹிந்தி மொழியில் கூலி வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே அமிதாப் பச்சன் நடிப்பில் கூலி என்ற பெயரில் படம் பாலிவுட்டில் வந்திருக்கிறது. அதன் காரணமாக இந்த முடிவை படக்குழு எடுத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X