அய்யய்யோ கூலி பட காட்சிகள் ரத்து.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு தெரியுமா?.. இப்படி ஆகிப்போச்சே
ஹைதராபாத்: கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது. விமர்சன ரீதியாக படம் அடி வாங்கினாலும் வசூலில் பட்டையை கிளப்பியிருக்கிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 151 கோடி ரூபாய் வசூலானதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கூலி திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது.
ரஜினிகாந்த், அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சார்லி, ரச்சிதா ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்தது. முதன்முறையாக ரஜினியும், லோகியும் இந்தப் படத்தில் இணைந்ததால்; கண்டிப்பாக கோலிவுட்டில் பெரிய சம்பவம் ஒன்று காத்திருப்பதாக திரைத்துறை ஆர்வலர்கள் சொல்லிகொண்டே இருந்தார்கள்.
சம்பவம் எல்லாம் இல்லை: ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸானது. மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்ற ஆர்வத்துடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் சீன் பை சீன் அதிர்ச்சி கொடுத்தார். ஒரு சீனில்கூட சுவாரஸ்யமோ, திருப்தியை ஏற்படவில்லை. ரஜினி என்ற ஒற்றை குதிரை மீது ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி வைத்து சவாரி செய்ய முற்பட்டிருந்தார். ஆனால் அந்தக் குதிரையைத்தான் ரசித்தார்களே ஒழிய; இந்த ஐடியாவை செய்த லோகேஷை கழுவி ஊற்றிவருகிறார்கள்.

ஏன் லோகேஷ் இப்படி?: ரசிகர்களில் ஒருதரப்பினரோ படம் பார்த்துவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டோம் என்று புலம்பிவருகின்றனர். படத்தில் ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லை; பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன? லோகேஷ் கனகராஜிடமிருந்து இவ்வளவு சுமாரான படத்தை எதிர்பார்க்கவே இல்லை என்று புலம்பி தள்ளுகிறார்கள். மேலும் நீங்கள் பத்து படங்களுக்கு திரைத்துறையிலிருந்து விலக வேண்டாம்; இப்போதே விலகிவிடுங்கள் அல்லது கைதி, மாநகரம் போன்ற ஜானர்களில் படம் எடுங்கள் என்று அட்வைஸும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
வசூலில் சூப்பர்தான்: விமர்சன ரீதியாக படம் கழுவி ஊற்றப்பட்டாலும் வசூலில் சக்கைப்போடு போடுகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் 151 கோடி ரூபாய் வசூலித்து லியோ வசூலித்த 148 கோடி ரூபாய் சாதனையை முறியடித்தது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் டல் அடிக்க ஆரம்பித்தாலும் அதள பாதாளத்துக்கு செல்லவில்லை. மூன்றாவது நாளான நேற்று இந்தியாவில் 38 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
காட்சிகள் ரத்து: இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு சோகமான நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது. அதாவது தெலங்கானா மாநிலத்தின் ஆதிலாபாத்தில் கனமழை பெய்துவருகிறது. அதனால் தியேட்டர்களுக்குள் வெள்ளம் புகுந்தது. எனவே கூலி திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே படத்துக்கு ஒரு மாதிரியான ரிசல்ட்டுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் நான்காவது நாளே ஷோ கேன்சல் ஆனதை எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கூறிவருகிறார்கள். இருந்தாலும் விரைவில் காட்சிகள் திரையிடப்படும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. முன்னதாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்துக்கு நல்ல ஓபனிங்கும், வசூலும் இருப்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











