Coolie movie: அமீர்கான் போர்ஷன்ஸ் ஓவர்.. சூர்யா வழியில் பிளான் போடும் கூலி பட டீம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா ஸ்ருதிஹாசன் அமீர்கான் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் கூலி படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்று முடிந்துள்ள ஷூட்டிங்கில் அமீர்கான் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.
ஜெய்பூரில் அமீர்கான் மற்றும் ரஜினிகாந்த் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் விரைவில் அடுத்த கட்ட சூட்டிங்கிற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த சூட்டிங் மீண்டும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் அடுத்தடுத்த இடங்களில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றிருந்த நிலையில் அங்கு ரஜினிகாந்துடன் இணைந்து அமீர்கான் காம்பினேஷன் காட்சிகளின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி படத்தின் டைட்டில் டீசர், போஸ்டர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு கொடுத்துள்ளது.
கெத்து காட்டிய சிங்கிள்: இடையில் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சில தினங்கள் படத்தின் சூட்டிங் தள்ளிப்போன நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வந்த சூட்டிங் நிறைவடைந்துள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி படத்தின் பாடல் கிளிம்ப்ஸ் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படத்தை போலவே இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணியும் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டியே ரஜினி பிறந்தநாளில் வெளியான பாடல் மிகச்சிறப்பான வைபை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தது.
அடுத்தக்கட்ட சூட்டிங்: இதனிடையே கூலி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரளாவில் துவங்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் கோவையில் சூர்யாவின் சூர்யா 45 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். இந்நிலையில் கூலி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வரும் பிப்ரவரிக்குள் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூலி படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில், படத்தின் கதைக்களம் எப்படி அமையும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் பிளான்: ரஜினியை இதுவரை இல்லாத வகையில் அதிரடி ஆக்சன் களத்தில் காட்ட உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்த நிலையில், அதற்கு ஏற்ப விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய செட் போடப்பட்டு படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்நிலையில் படத்தில் அமீர்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால் அவர்களுக்கு கதையில் எப்படிப்பட்ட கேரக்டர்கள் அமைந்திருக்கும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
திரைக்கதையில் கவனம்: முன்னதாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் மிகப்பெரிய வசூலை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் லியோ படம் கொடுத்த படிப்பினையை கவனத்தில் கொண்டு அடுத்த படத்தை இயக்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாக கூறியிருந்தார். அதனால் அவர் கூலி படத்தின் திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. விக்ரம் போன்ற அதிரடிக்கு ரசிகர்கள் தயாராகலாம்.


Click it and Unblock the Notifications











