Coolie X Review - ரஜினியின் கரங்கள் உயர்ந்ததா?.. கூலி எப்படி இருக்கிறது?.. ட்விட்டர் விமர்சனம்
சென்னை: ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் இன்று ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் ஒன்பது மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் படம் அதற்கு முன்னதாகவெ வெளியாவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற இடங்களில் படம் பார்க்க தொடங்கியிருக்கும் ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தி பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் கூலி. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் கண்டிப்பாக கோலிவுட்டில் புது சரித்திரம் படைக்கப்படும் என்றுதான் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். அந்த ஹைப்புக்கு தகுந்தபடிதான் படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் அமைந்திருந்தன. கண்டிப்பாக பெரிய சம்பவத்தை இப்படம் படைக்கும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள்.
ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் மாஸ்: படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு நடந்தது. கேரளா, தமிழ்நாடு தவிர்த்து இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ஃபுல் வேகத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. அதேபோல் வெளிநாடுகளிலும் வேறு எந்த இந்திய படமும் செய்யாத அளவுக்கு ரெக்கார்டை செய்திருக்கிறது கூலி. அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் எப்போது ரிலீஸ்?: தமிழ்நாட்டை பொறுத்தவரை காலை ஒன்பது மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதியளித்திருக்கிறது. அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை. ரிலீஸாகும் முதல் நாளான இன்று மொத்தம் ஐந்து காட்சிகள் திரையிடப்படவிருக்கின்றன. தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற இடங்களில் 9 மணிக்கு முன்னதாகவே காட்சிகள் திரையிடப்படுகின்றன. இந்நிலையில் படம் பார்க்க ஆரம்பித்திருக்கும் ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் விமர்சனம்: படம் பார்த்த ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், "படம் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சுனாமிதான். ஸ்க்ரீன்ப்ளே அபாராமாக இருக்கிறது. இதுபோல் ரஜினியை இதற்கு முன்னர் பார்த்ததில்லை. அனிருத்தின் பின்னணி இசை புல்லரிக்க செய்கிறது. தியேட்டர்களில் முழுக்க முழுக்க கொண்டாட்டம்தான். 5 மதிப்பெண்களுக்கு 4.5 மதிப்பெண் கொடுக்கலாம்" என புகழ்ந்திருக்கிறார்.
டைட்டில் கார்டு அபாரம்: அதேபோல் படம் பார்க்க தொடங்கியிருக்கும் இன்னொரு ரசிகர், ரஜினிகாந்த்தின் டைட்டில் கார்டை பகிர்ந்து ஹார்ட் மற்றும் நெருப்பு எமோஜியை பகிர்ந்திருக்கிறார். இவரைப் போன்று பலரும் ரஜினியின் இன்ட்ரோ சீனை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகிறார்கள். மேலும் இன்னொரு ரசிகர், நாகார்ஜுனாவின் கரியரில் இந்த ரோல்தான் சிறந்தது என்று தெரிவித்திருக்கிறார்.
முதல் பாதி போர்தான்: படம் பார்த்த இந்த ரசிகரோ, "கூலி படத்தின் முதல் பாதி டல்லாக போகிறது. மோசமான திரைக்கதையால் போர் அடிக்கிறது. ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை தவிர்த்து ஹை மொமண்ட்ஸ் எதுவுமே இல்லை. அனிருத்தின் இசையும் பெரிதாக உதவவில்லை.
இரண்டாவது பாதியாவது நன்றாக இருக்க வேண்டும் லோகேஷ் கனகராஜ்" என குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு ரசிகையோ, 'தான் ஒரு கமல் ரசிகர் என்று லோகேஷ் நிரூபித்துவிட்டார். கமலின் ரசிகர்களுக்கு பிடித்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார்' என போட்டிருக்கிறார்.
அதேபோல் இன்னொரு ரசிகர், "முதல் பாதி ஓகே. எனர்ஜியான சூப்பர் ஸ்டார், ஸ்டைலிஷ் நாகார்ஜுனா, ஃபெர்ஃபார்மார் ஸ்ருதி, அனிருத் மஜா. நான்கு பாடல்கள் சூப்பர். சீன்கள் கனெக்ட் ஆகவில்லை. இடைவேளை தருணமும், வின்டேஜ் பாடலும் பக்கா" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











