கூலி படத்தின் டீசர் எப்போ எந்த நாள் தெரியுமா.. சரவெடியோட ரசிகர்கள் காத்திருக்காங்க!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. ரஜினி குறித்த காட்சிகள் முடிந்த நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறாராம். சமீபத்தில் பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் நடனம் ஆடுவதாக தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக கூலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

லோகேஷ் - ரஜினி காம்போ: கபாலி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் இளம் தலைமுறையினர் இயக்கும் படங்களில் படுவேகமாக நடித்து வருகிறார். பா.ரஞ்சித்துடன் கபாலி காலா, கார்த்திக் சுப்பராஜுடன் பேட்ட, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர், ஜெயிலர் 2 என ஹிட் வரிசையில் முதலிடத்தை பிடித்து வருகிறார் ரஜினி. அதேபோன்று லோகேஷ் கனகராஜுடன் முதல் முறையாக கூலி படத்தில் இணைந்த செய்தி அறிந்து திரை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் 600 கோடி வசூலை குவித்தது. கமலுக்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படமாகவும் இருந்தது. அதேபோன்று மாஸ்டர் படத்தில் விஜய் பயங்கர ஸ்டைலிஷாகவும், ரசிகர்களை ஈர்க்கும் வகையான நடிப்பும் இருந்தது.

coolie movie teaser rajini coolie Thalaivar 171

தங்கம் கடத்தல்: லோகேஷ் கனகராஜ் படங்களை பொறுத்தவரை கொகைன், போதை மாத்திரை பதுக்கல் போன்ற சம்பவங்கள் தான் அதிகம் பேசுபொருளாக இருக்கும். ஹீரோக்களும் போதையை எதிர்த்து சண்டையிட்டு அந்த கும்பலை அடித்து நொறுக்குவார்கள், மக்களை காப்பது போன்று காட்சியமைத்திருப்பார். மேலும் எல்யூசி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முறையாக தங்கம் கடத்தல் கும்பலை பற்றி கூலி படம் உருவாகிறது. படத்தின் டைட்டில் டீசரில் தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் கும்பலை தேடி ரஜினி செல்வது போன்று இடம்பிடித்திருந்தது. எனவே ரஜினியே தங்கம் தான் அவர்கிட்டேயே தங்க கடத்தலா என ரசிகர்களும் பேச தொடங்கினர். போதையில் இருந்து தங்கத்திற்கு லோகேஷ் கனகாஜ் மாறியிருப்பதால் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

coolie movie teaser rajini coolie Thalaivar 171

நட்சத்திரங்கள்: கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன், கன்னட நடிகர் உபேந்திரா, நாகர்ஜூனா என ஸ்டார் நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். அதேபோன்று என்னம்மா கண்ணு என்று நக்கலாக ரஜினியை பார்த்து கேட்கும் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார். மொத்தத்தில் இப்படம் மெஹா ஹிட் என்றே எழுதி வைத்துவிடுங்கள் என ரசிகர்கள் கூற தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த் - சத்யராஜ் காம்போவை பார்ப்பதில் ரசிகர்களுக்கு ஆர்வம் கூடியுள்ளது. ரஜினியின் மாஸா நடந்து வந்தாலும், சமீபத்தில் வெளியான பாட்டின் டீசர் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

coolie movie teaser rajini coolie Thalaivar 171

கூலி படத்தின் டீசர்?: கூலி படத்தை தொடர்ந்த ரஜினி தீவிரமாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். ரசிகர்களும் கூலி படத்தின் அடுத்த அப்டேட் கேட்டு நச்சரித்த வரும் நிலையில், மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 14ஆம் தேதி கூலி படத்தின் டீசர் வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இசையமைப்பாளர் அனிருத் டீசருக்கான இசையை முடித்து கொடுத்துவிட்டாராம். நேரம் கடத்தாமல் கூலி படத்தின் அனைத்து இசைகோர்ப்புகளை முடித்து அடுத்த படத்திற்கு அனிருத் தயாராகிவிட்டாராம். இந்த தகவலை கேட்டு ரஜினி ரசிகர்கள் வலைதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

coolie movie teaser rajini coolie Thalaivar 171

பிறந்தநாள்: வரும் மார்ச் 14ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளாகும். அதைத்தொடர்ந்து சிவாஜி ராவ் கெய்க்வாடுக்கு ரஜினிகாந்த் என்ற பெயரை பாலசந்தர் சூட்டிய நாள் என்பதாலும் கூலி டீசர் வெளியாக பொருத்தமான நாளாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளார்களாம். பட்டாசு வெடிக்க திரை ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

coolie movie teaser rajini coolie Thalaivar 171

More from Filmibeat

Read more about: thalaivar 171 ரஜினி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X