போடு வெடிய.. ஜெயிலர் 2 வேலையை ஆரம்பித்த நெல்சன் திலீப்குமார்?.. ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனையடுத்து இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறார். இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில்; தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ஜெயிலர். அந்தப் படம் ரஜினியின் கரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜெயிலருக்கு முன்பு ரஜினி நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. அந்த சமயம் பார்த்து விஜய் ரசிகர்களோ; இனி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று பேச ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக ரஜினியின் ரசிகர்களுக்கும் விஜய்யின் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது.

அந்த சீன்லாம் இல்ல: மேலும் அந்த சமயத்தில் காக்கா, கழுகு கதையும் ஃபேமஸ் ஆனது. சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அதில் ரஜினியுடன் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பான் இந்தியா அளவில் படம் வெளியாகி ஹிட்டடித்திருந்தது. எனவே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என்றும்; விஜய் சூப்பர் ஸ்டார் ஆகும் எந்த சீனும் நடக்காது என்றும் ரஜினி ரசிகர்கள் கூறினார்கள்.
நெல்சனுக்கும் நிம்மதி: ரஜினிகாந்த் மட்டுமின்றி நெல்சன் திலீப்குமாருக்கும் இந்தப் படம் வாழ்வு கொடுத்தது.ஏனெனில் இதற்கு முன்பு அவர் இயக்கியிருந்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. டாக்டர் என்ற படத்தை இயக்கி நூறு கோடி ரூபாய் வசூலித்த இயக்குநரா இவர் என்றெல்லாம் நெல்சனை கடுமையாக ரோஸ்ட் செய்தார்கள். இதன் காரணமாக ஜெயிலரில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்து அதை செய்தும் காண்பித்தார் நெல்சன்.
வசூல் வேட்டை: விமர்சன ரீதியாக படம் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. உலக அளவில் மொத்தம் 700 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த காரையும் பரிசாக கொடுத்தார் கலாநிதி மாறன். சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று தகவல்கள் வெளியாகின.
தொடங்கிய வேலைகள்: அந்தத் தகவல்களை நெல்சன் திலீப்குமாரும் உறுதி செய்திருந்தார். இருந்தாலும் படத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ஜெயிலர் 2 படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். அதற்கான ஷூட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும்; அந்த வீடியோ ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











