விஜய், அஜித்தெல்லாம் ஓரம்போங்க.. தலைவர் மரணமாஸ் என்ட்ரி.. ஜெயிலர் 2 சும்மா தெறிக்குதா?
சென்னை: இந்த பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கார் ரேஸ் மூலமாகவும், விஜய் கீர்த்தி சுரேஷுடன் பொங்கல் கொண்டாடிய காட்சிகளை வெளியிட்டும் குஷிப்படுத்தினர்.
இந்நிலையில், கண்ணுங்களா இது என்னோட டர்ன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் அட்டகாசமான அறிவிப்பு வீடியோவை இறக்கி ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்த பொங்கல் பண்டிகையன்று கொண்டு வந்துவிட்டார்.

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகாமல் இன்னமும் இவர்களது ராஜ்ஜியம் தான் கொடிகட்டி பறக்கிறது என ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.
ஜெயிலர்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2013ல் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த படம் தான் ஜெயிலர். அதன் பின்னர் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கேமியோவாக நடித்து வெளியான லால் சலாம் படம் படுதோல்வியை சந்தித்தது. ஞானவேல் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான வேட்டையன் படமும் வசூல் வேட்டையை பெரிதாக ஆடவில்லை. இந்த ஆண்டு கூலி படத்தின் மூலம் வட்டியும் முதலுமாக வசூல் செய்ய முடிவு செய்துள்ள ரஜினிகாந்த் அடுத்தும் மிஸ் ஆகாக்கூடாது என ஜெயிலர் 2வை இறக்க முடிவு செய்துள்ளார்.
ஜெயிலர் 2 அறிமுக வீடியோ தெறிக்குதே: நெல்சன் மற்றும் அனிருத் கோவாவில் மசாஜ் எடுத்துக் கொண்டே ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்க அங்கே அவர்கள் இருக்கும் இடத்தை தகர்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல பேரை போட்டுத் தள்ளிக் கொண்டே மாஸ் என்ட்ரி கொடுப்பதும் அவரை போட்டுத் தள்ள ஒரு பெரிய துப்பாக்கிகளுடன் வண்டிகளில் ஆட்கள் வர தன்னுடைய கண்ணாடியை கழட்டிக் காட்ட ஜெயிலர் படத்தில் வருவது போல ஸ்னைப்பர்கள் ராக்கெட் பாம்ப்களை வெடிக்கச் செய்து அந்த வாகனங்களை வெடிக்கச் செய்யும் தெறி புரமோ வீடியோவை நெல்சன் வெளியிட்டு ஜெயிலர் 2 அறிவிப்பை அறிவித்துள்ளார்.
விஜய், அஜித் படங்கள் வராது: ஜெயிலர் 2 வரும்போது அதற்கு போட்டியாக விஜய்யின் படம் எதுவும் வராதே என்றும் அஜித் படம் வருமா? வராதா? என்கிற சந்தேகம் உள்ளது என்றும் இந்த வயதிலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக புயல் போல நடித்துக் கொண்டிருக்கிறாரே சூப்பர் ஸ்டார் என புரமோ வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











