Jailer 2 Shoot Wrapped: ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்.. ரஜினிகாந்துக்கு கேக் ஊட்டிவிட்ட நெல்சன்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த ஜெயிலர் 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடைசியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்தது.

ஜெயிலர் திரைப்படத்துக்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. ஜெயிலர் படம் 600 கோடி வசூல் செய்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் சாதனையை படைத்தது.

Rajinikanth s Jailer 2 shoot wrapped up Sun Pictures shares the cake cutting pics
Photo Credit:

ஜெயிலர் படத்துக்குப் பிறகும் மல்டி ஸ்டார்களை வைத்து ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் மற்றும் கூலி திரைப்படங்கள் ஜெயிலர் படம் அளவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வருகிறது ஜெயிலர் 2.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. நெல்சன், வசந்த் ரவி உள்ளிட்டோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுத பூஜை ரிலீஸ்: ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கான், பாலகிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர்கள் இருவருமே நடிக்கவில்லை என கடைசியாக தகவல்கள் வெளியாகின. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரையே சரியாக பயன்படுத்தினாலே ஜெயிலர் 2 தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக மாறும் என்கின்றனர்.

இந்த ஆண்டின் பெரிய படம்: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பெரிய படமாக விஜய்யின் ஜன நாயகன் மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜன நாயகன் படம் முழுவதுமே இணையத்தில் லீக்காகி படக்குழுவுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் மட்டுமே கோலிவுட்டுக்கு இந்த ஆண்டு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூலை ஏற்படுத்தி தரும் படமாக இருக்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X