ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2.. ஷூட்டிங் எப்போ தெரியுமா?.. லேட்டஸ்ட் தகவல் இதுதான்

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. சூழல் இப்படி இருக்க அப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு; அதற்கான அறிமுக வீடியோவும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே மோசமான தோல்வியை பெற்றன. எனவே அவரது சகாப்தம் முடிந்துவிட்டதாக பலரும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அந்தப் பேச்சினை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் தவிடுபொடியாக்கியது. ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னா, யோகி பாபு, விநாயகன், மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அடுத்த படங்கள்: ஜெயிலர் படத்தை முடித்த பிறகு வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினி. பெரிய எதிர்பார்ப்போடு அப்படம் வெளியானாலும் சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. ஜெயிலர் கொடுத்த வெற்றி வைபை ரஜினி இதில் மிஸ் செய்துவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் நொந்துகொண்டார்கள். அதேசமயம் தங்கள் தலைவரின் நடிப்பும்; இந்தக் கதையை அவர் தேர்ந்தெடுத்து சமூக பொறுப்புள்ள நடிகர் என்ற பெயரை பெற்றதும் தங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததாக கூறினார்கள்.

கூலி ரஜினிகாந்த்: இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. லோகேஷ்தான் இப்போதைக்கு டாப் இயக்குநராக வலம் வருவதால் கண்டிப்பாக கூலி தரமான சம்பவம் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Rajinikanth s Jailer 2 Shooting Begins on March 10

ஜெயிலர் 2: இதற்கிடையே ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு பிறகு அதில் எந்தவிதமான மூவ்மென்ட்டும் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் 2 பற்றிய அறிவிப்பு வீடியோ கடந்த பொங்கலுக்கு வெளியானது. வழக்கம்போல் ரஜினிகாந்த் படு ஸ்டைலாகவும், மாஸாகவும் இருந்தார். அந்த வீடியோவுக்கு பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தார்கள். அதேசமயம் டூப்பை வைத்துதான் அந்த வீடியோவை நெல்சன் உருவாக்கினார் என்று வதந்திகள் பரவ; அதனை பொய் என்று நிரூபிக்கும்வகையில் அதன் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ்.

ஜெயிலர் 2 ஷூட்டிங்: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ஷூட்டிங் மார்ச் 10ஆம் தேதி தொடங்கும் என்றும்; முதல் ஷெட்யூலில் ரஜினிக்கு சம்பந்தமான காட்சிகளை எடுக்க இயக்குநர் திட்டமிட்டிருக்கிறார் என கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் தொடங்கும் என்று வெளியாகியிருக்கும் தகவலை கேட்டு அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X