2023 Top 5 Box Office Movies: இந்த ஆண்டு வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்.. நம்பர் ஒன் யாரு?

சென்னை: கடந்த ஆண்டு கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவை மீட்டன. தெலுங்கு, கன்னட படங்கள் எல்லாம் 1000 கோடி வசூலை எட்டி வரும் நிலையில், இந்த ஆண்டாவது தமிழ் படம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா? என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஆனால், அதற்கு ஈடு செய்யும் விதமாக பல படங்கள் வசூல் வேட்டை நடத்தி ஒட்டுமொத்த கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸை உயர்த்தி உள்ளன. முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு எதிர்பார்த்த வசூல் வேட்டையை ஈட்டிக் கொடுத்த நிலையில், அதில், முதல் 5 இடங்களை பிடித்துள்ள படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

Rajinikanths Jailer and Vijays Leo leads Top 5 Biggest Box Office Movies of 2023 list

5வது இடத்தில் துணிவு: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பேங்க் ஹெயிஸ்ட் படமாக உருவான துணிவு திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கான தரமான சம்பவமாக அமைந்திருந்தது. 200 கோடி ரூபாய் வசூலை அந்த படம் இந்த ஆண்டு வாரிசு படத்துடன் போட்டி போட்ட நிலையில், ஈட்டியது. சோலோவாக வெளியாகி இருந்தால் அதிக வசூலை ஈட்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4வது இடத்தில் வாரிசு: தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு என்டர்டெயின்மென்ட் படமாக வெளியானாலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும், அந்த படம் 300 கோடி வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

3வது இடத்தில் பொன்னியின் செல்வன் 2: மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 350 கோடி வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் முதல் பாகம் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவு வசூலை ஈட்டிக் கொடுத்துள்ளது.

2வது இடத்தில் ஜெயிலர்: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 525 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 607 கோடி வசூல் வரை மொத்தமாக ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலிடத்தில் லியோ: இந்த ஆண்டு வெளியான படங்களில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்களுக்கு இடையே தான் வசூலில் சரியான போட்டி நிலவியது. 540 கோடி வரை இந்த படம் அதிகாரப்பூர்வ வசூல் என அறிவிக்கப்பட்ட நிலையில், 625 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டும் லோகேஷ் இயக்கிய விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், இந்த ஆண்டும் லியோ வசூல் வேட்டை நடத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 2000 கோடிக்கும் மேல் தமிழ் சினிமாவுக்கு இந்த டாப் 5 படங்களே வசூலை அள்ளிக் கொடுத்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X