Jailer: ஜெயிலரை கொண்டாடும் கர்நாடக ரசிகர்கள்.. டிக்கெட் இவ்ளோ விலையா?
பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படம் தற்போது சில ஷோக்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
முதல் பாதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது பாதி குறித்தும் நல்ல விமர்சனங்களே வந்துள்ளன.

கர்நாடக ரசிகர்களை அதிகமாக கவர்ந்த ஜெயிலர் படம்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் ரிலீசாகியுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் தற்போது ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
ரஜினி உள்ளிட்ட படத்தின் நடிகர்கள் அனைவரும் தங்களின் கேரக்டர்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் படம் சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தின் புக்கிங் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பாக அமைந்தது. வெளிநாட்டு ரசிகர்களும் இந்தப் படத்தை அதிகமாக கொண்டாடினர். வெளிநாடுகளிலும் ப்ரீ புக்கிங் மிகவும் பெரிய அளவில் அமைந்தது.
இந்நிலையில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தை தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும் ஜெயிலர் படத்தை பார்க்க ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவில் ரசிகர்கள் இந்தப் படத்தை காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெங்களூருவில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் படத்தை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது.

ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்களை கவரும்வகையில் முன்னணி நடிகரை இந்தப் படத்தில் சேர்த்திருந்தார் நெல்சன் திலீப்குமார். அந்த வகையில் கர்நாடக ரசிகர்களை கவரும்வகையில் படத்தில் சிவராஜ்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். பெரும்பாலும் கர்நாடகாவில் முன்னணி நடிகர்களின் படங்களின் டிக்கெட்டுகளும் அதிகபட்சமாக 300 ரூபாய் வரைவில் விற்கப்படும். ஆனால் ஜெயிலர் படத்தின் டிக்கெட்டுகள் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் தற்போது 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையில் விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பெங்களூருவில் அதிகப்படியான திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகியுள்ள நிலையில், படத்தின் முதல்நாள் கலெக்ஷன் தாறுமாறாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் பாதி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இரண்டாவது பாதியிலும் சில குறைகள் இருந்தாலும் சராசரிக்கும் அதிகமாகவே உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் பிளாஷ்பேக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications











