Lal Salaam Ticket Booking: சனிக்கிழமை லால் சலாம் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?.. தேறுமா? தேறாதா?
சென்னை: லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் லால் சலாம் மற்றும் வேட்டையன் என இரு படங்களில் கமிட் ஆனார். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன கதையை கேட்டதும் ரொம்பவே பிடித்துப்போய் விட்ட நிலையில், தானே நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டு மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், இந்த படம் ரஜினிகாந்தின் நேரடிப்படம் என இல்லாத நிலையில், இதில், கேமியோ ரோலில் தான் அவர் நடித்துள்ளார் என நினைத்த ரசிகர்கள் ஜெயிலர் படம் முதல் நாளுக்கு கொடுத்த வரவேற்பை ரசிகர்கள் இந்த படத்துக்கு கொடுக்கவில்லை.

ஜெயிலர் வசூல்: கடந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 98 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அந்த படம் ஒட்டுமொத்தமாக 600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. அதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த, தர்பார் படங்களும் சரியாக ஓடவில்லை என்றாலும் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தின.
விக்ராந்த் அப்பா கதாபாத்திரம்: லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் விக்ராந்துக்கு அப்பாவாக மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் படத்தில் ஒரு அங்கமாகவே வந்து செல்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் வந்தததும் தான் படம் பெரியளவில் எதிர்பார்ப்பை பெற்றது. ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் என தள்ளிப் போடப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்களுடன் மோதாமல் பிப்ரவரி 9ம் தேதி வெளியானது.
குறைவான வசூல்: லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் விஜய்க்கும் தனக்கும் போட்டியில்லை என்று பேசியிருந்தார். காக்கா - கழுகு கதையெல்லாம் இனி சொல்ல வேண்டாம் என்றும் கூறியிருந்தார். அதன் பின்னர் நடிகர் விஜய்யும் சமீபத்தில் அரசியல் கட்சியை அறிவிக்க சோஷியல் மீடியாவில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே மோதல் போக்கு அதிகளவில் குறைந்து விட்டது. இந்நிலையில், லால் சலாம் படத்தை முதல் நாளில் ரசிகர்கள் பார்க்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளும் முடித்து வைக்கப்பட்ட நிலையில், ஃபயரே இல்லாமல் ரஜினி படம் வெளியான நிலையில், வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே முதல் நாளில் வசூல் செய்திருக்கிறது.
சனிக்கிழமை நிலவரம் எப்படி?: நேற்று பல திரையரங்குகளில் பச்சை நிறமாக காலை முதல் இரவு காட்சிகள் வரை தென்பட்ட நிலையில், சனிக்கிழமையான இன்று படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் ரஜினிகாந்த் கூடுதலான காட்சிகளில் வருகிறார் என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அதிகளவில் வீக்கெண்டுக்கு டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். சனி மற்றும் ஞாயிறுகளில் டிக்கெட் புக்கிங் முதல் நாளை விட சூடு பிடித்திருக்கிறது. சனிக்கிழமையான இன்று 6 முதல் 8 கோடி அளவு வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











