Lal Salaam: மொய்தீன் பாயும் இந்த வருஷமே பராக் போல.. ரஜினிகாந்தின் லால் சலாம் ஷூட்டிங் ஓவராம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னாள் கணவர் தனுஷை வைத்து '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தையும் இயக்கினார்.

ஆனால், அந்த படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், அதன் பின்னர் இயக்குவதை நிறுத்தியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை பிரிந்த நிலையில், மீண்டும் இயக்குநராக மாறி உள்ளார்.
லால் சலாம் ஷூட்டிங் நிறைவு: திருவண்ணாமலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடங்கி இருந்தார். அதற்குள் விறுவிறுப்பாக படத்தின் வேலைகளை முடித்து விட்டு ஜூலை மாதமே ஷூட்டிங்கையும் முடித்துள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
லால் சலாம் படத்தில் ஹீரோக்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
மொய்தீன் பாய் லுக்: லால் சலாம் படத்தில் மும்பையை சேர்ந்த டானாக ரஜினி வருகிறார் என்றதுமே பாட்ஷா பாயா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மொய்தீன் பாயை அறிமுகப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இந்நிலையில், தலையில் குல்லா எல்லாம் போட்டுக் கொண்டு மொய்தீன் பாய் லுக்கில் நடிகர் ரஜினிகாந்த் படத்தின் நிறைவு நாளிலும் கலந்து கொண்டு கேக் கட்டிங் செய்த போட்டோ தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மகிழ்ச்சியில் மகள்: உங்களை வைத்து படம் இயக்குவதே ஒரு மிராக்கிள்.. நீங்க ஒரு ப்யூர் மேஜிக் அப்பா என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேப்ஷன் போட்டு லால் சலாம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது என்கிற போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

ஜூலை மாதமே இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், தீபாவளிக்கு லால் சலாம் படம் வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
நவம்பர் அல்லது டிசம்பர் இறுதிக்குள் இந்த ஆண்டே லால் சலாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படத்தின் மூலம் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்த உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஆண்டு பேக் டு பேக் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை கொடுப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











