Jailer - ஜெயிலர் பார்த்துவிட்டு அனிருத்துக்கு ஃபோன் செய்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை:Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு அனிருத்துக்கு ஃபோன் செய்து ரஜினி சொன்ன விஷயம் தெரிய வந்திருக்கிறது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படமானது இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மலையாளத்திலிருந்து மோகன் லால், தெலுங்கிலிருந்து சுனில், கன்னடத்திலிருந்து சிவராஜ் குமார், ஹிந்தியிலிருந்து ஜாக்கி ஷெராஃப் என பான் இந்தியா ஸ்டார்கள் இதில் களமிறங்கியிருக்கின்றனர். இவர்கள் தவிர வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் தமன்னா, விநாயகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்

Rajinikanths Reaction After Watching Jailer Movie

மீம் மெட்டீரியல்: ரஜினிகாந்திற்கும், நெல்சன் திலீப் குமாருக்கும் இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் நெல்சன் பீஸ்ட் படத்தின் தோல்வியால் அதிகமாகவேம் கிண்டல் செய்யப்பட்டார். சில இடங்களில் அவமானத்தையும் சந்தித்தார்,. அதேபோல்தான் ரஜினிகாந்த்தும்; தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்ததால் அந்த படங்களும் மீம் மெட்டீரியலாக மாற்றினர். இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படமானது இன்று வெளியாகியிருக்கிறது.

செலிபிரேஷன் மோட்: இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வெளியாகியிருப்பதால் படத்தை திருவிழா போல் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டு 9 மணிக்குத்தான் முதல் காட்சி திரையிடப்பட்டதால் ரசிகர்கள் சிறிது ஏமாற்றமடைந்தாலும் 9 மணிக்கு முன்னதாகவே தியேட்டர் வாசலில் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.

Rajinikanths Reaction After Watching Jailer Movie

படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்: வெளிநாடுகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. அங்கு படம் பார்த்தவர்கள் ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் என்று கூறிவருகின்றனர். மேலும் நெல்சன் திலீப்குமாருக்கும், ரஜினிகாந்த்திற்கும் இது தரமான கம்பேக் என ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துவருகின்றனர். அதேபோல் அனிருத்தின் பிஜிஎம் பல இடங்களில் கூஸ்பம்ப்ஸாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

ரஜினி ரியாக்‌ஷன்: இந்நிலையில் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு அதில் அமைக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை குறித்து அனிருத்திடம் ரஜினிகாந்த் ஃபோன் போட்டு பேசினாராம். அப்போது ரஜினிகாந்த் அனிருத்திடம், "அனி Oh My God" என ஆச்சரியத்தின் உச்சத்தில் பேசினாராம். நிச்சயமாக ரஜினிக்கு பின்னணி இசை பிடித்திருக்கும் என்றுதான் நம்புகிறேன் என அனிருத் ஒரு வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X