Blue Sattai Maran: ரஜினிகாந்துக்கு இன்செக்யூரிட்டி வந்துடுச்சு.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!

சென்னை: சமீபத்தில் நடிகர் விஜய்யை பாராட்டியிருந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது ரஜினிக்கு எதிராக போட்டுள்ள ட்வீட் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிளான ஜுஜுபி பாடல் ஜூலை 26ம் தேதி மாலை வெளியானது. அந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்துமே நடிகர் விஜய்யையும் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படும் அனைத்து நடிகர்களுக்கும் பதிலடி கொடுப்பதாகவே இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்ட இன்செக்யூரிட்டி தான் சூப்பர் சுப்புவை வைத்து இது போன்ற பாடல்களை உருவாக்க காரணம் என ட்வீட் போட்டு விளாசி உள்ளார்.

Rajinikanths sign of INSECURITY was clearly evident - Blue Sattai Maran tweet

சூப்பர்ஸ்டார் பட்டம் சர்ச்சை: வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என பேசியது பெரும் அதிருப்தியை ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையிலேயே சூப்பர்ஸ்டார் தனது மாஸை காட்டி வருகிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் நிலையில், விஜய்க்கு எதிராகவே நடிகர் ரஜினிகாந்த் தனது வியாபார அஸ்திரத்தை பயன்படுத்தி உள்ளார் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார்.

ரஜினிக்கு இன்செக்யூரிட்டி வந்துடுச்சு: ஹுகும் பாடலிலேயே முரட்டு காளைக்கு இன்செக்யூரிட்டி அறிகுறி தெரிந்தது. இந்நிலையில், ஜுஜுபி பாடல் மூலம் அவருக்கு இன்செக்யூரிட்டி வந்து விட்டது தெளிவாகத் தெரிகிறது.

தர்பார், அண்ணாத்த படங்கள் தோல்வி அடைந்த நிலையில், தனது ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டருக்கு வர விஜய்யுடன் மோதல் போன்று பாடல் வரிகளில் வைப்பது மற்றும் நான் தான் இப்பவும் சூப்பர்ஸ்டார் என சொல்லிக் கொண்டு வசூலை அள்ள போட்டுள்ள வியாபார அரசியல் தான் இந்த இரு பாடல்களும் என ப்ளூ சட்டை மாறன் தனது ட்வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Rajinikanths sign of INSECURITY was clearly evident - Blue Sattai Maran tweet

கோல்டு காயின் மாஃபியா: சமீப காலமாக ப்ளூ சட்டை மாறனும் கோல்டு காயின் மாஃபியாவில் இணைந்து விட்டார் என்பது தான் நீங்கள் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு எதிராக பதிவிடும் ட்வீட் மூலம் தெரிகிறது என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில், நடிகர் விஜய்யை ப்ளூ சட்டை மாறன் பாராட்டி ட்வீட் போட்ட நிலையில், என்ன ப்ளூ சட்டை மாறன் மொத்தமாக மாறிட்டாரே என நெட்டிசன்கள் அவரையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X