Thalaivar 171: போலீஸ் அதிகாரி இல்லையா?.. மருமகன் கதையை கையில் எடுத்த மாமனார்.. தலையே சுத்துதே!..
சென்னை: லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171 திரைப்படத்தின் கதை குறித்த தகவல்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகின்றன.
முன்னதாக ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் என்கவுண்டர் பிடிக்காத போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை நடிகர் ரஜினிகாந்த்துக்காக உருவாக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில், தற்போது கதையே மாறிவிட்டதாக கூறுகின்றனர்.

போலீஸ் கதை இல்லை: மூன்று முகம் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்த பாண்டியன் திரைப்படம் சரியாக ஓடவில்லை. பல ஆண்டுகள் கழித்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படமும் அட்டு பிளாப் ஆனது.
ஆனால் எப்படியாவது போலீசாக நடித்து பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த ரஜினிகாந்துக்கு சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூலை அள்ளித் தந்தது.
இந்நிலையில், மீண்டும் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறாரா? என தகவல்கள் பரவிவந்த நிலையில் தற்போது தலைவர் 171 படத்தின் கதை போலீஸ் அதிகாரி கதை இல்லை என்றும் கல்வியில் நடக்கும் ஊழல்களை களையக் கூடிய அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாத்தி கதை: இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்திலும் கல்வியில் நடக்கும் மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்த நிலையில், அப்படி ஒரு படமாக ஞானவேல் ரஜினிகாந்துக்கு 171 வது படத்தை கொடுக்கப் போகிறாரா என்கிற கேள்வி தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளன.
எப்படி இருந்தாலும் ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தரமான சம்பவத்தை செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மகள் படம்: ஜெயிலர் படத்தை தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோவாக நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு வேளை படத்தின் ரிலீஸ் தள்ளி போனால் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.
ஏற்கனவே பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் சியான் விக்ரமின் தங்களால் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











