தலைவர் 171 டைட்டில் டீசர்.. வெளியான செம தகவல்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக இருக்கிறார். அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படம் கடைசியாக ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ரஜினி. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கமல் ஹாசனுக்கு எப்படி லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் இந்தப் படமும் மெகா ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இப்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. லோகேஷும் இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய டீமுடன் வேலையில் இறங்கியிருக்கிறார். இதற்காக அவர் சமூக வலைதளங்களிலிருந்தும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
டைட்டில் டீசர் எப்போது: இந்நிலையில் தலைவர் 171 படத்தின் டீசர் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்றும் விரைவாக ஷூட்டிங்கை முடிக்கும்படி லோகேஷ் கனகராஜ் இப்போதே கச்சிதமான ஷெட்யூலை போட்டு வைத்திருப்பதாகவும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கின்றது. இதன் காரணமாக ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











