Dharman: தலைவர் 173 படத்தோட டைட்டில் ‘தர்மன்’.. யாரு இயக்குநர்?.. யாரெல்லாம் ஹீரோயின்னு பாருங்க!
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு 'தர்மன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுந்தர். சி படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர், டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 படத்தை பண்ணுவதாக போஸ்டர் ரிலீஸ் ஆனது.
ஆனால், அவரும் இல்லை என்பது உறுதியாகி விட்டது. டிராகன் படத்துக்குப் பிறகு சிம்புவை வைத்து படம் பண்ண காத்திருந்த அஸ்வத் மாரிமுத்து இன்று முதல் தலைவர் 173 படமான 'தர்மன்' படத்தை தொடங்கி உள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிம்ரன் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்ட நடிகைகள் லீடு ரோலில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தலைவர் 173 டைட்டில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து ஜெயிலர் 2 இந்த ஆண்டு வெளியாகி இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட்டை தமிழ் சினிமாவுக்கு தர காத்திருக்கிறது. இந்நிலையில், ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173வது படத்துக்கு 'தர்மன்' என டைட்டில் வைக்கப்பட்டு ஆக்ஷன் டாக்டராக கையில் கத்தி வைத்துக் கொண்டு எதிரியை குத்திக் கொல்லும் படமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் சிம்ரன்: ரஜினிகாந்த் உடன் பேட்ட படத்தில் சிம்ரன் இணைந்து நடித்த நிலையில், கமல்ஹாசன் உடன் ஏற்கனவே அவர் சில படங்களில் நடித்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சிம்ரனுக்கு பெரிய வாய்ப்பாக தர்மன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ராஷி கன்னாவும் இருக்காரு: சிம்ரன் மட்டுமின்றி தர்மன் படத்தில் இன்னொரு லீடு ஹீரோயினாக ராஷி கன்னாவும் நடிக்கிறார். டாக்டராக நடிக்கப் போகிறாரா? அல்லது அழகான நர்ஸாக வரப்போகிறாரா என்பது இனிமேல் தான் தெரிய வரும். அரண்மனை சீரிஸ் படங்களுக்குப் பிறகு தமிழில் ராஷி கன்னாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அனிருத் இசையில் மொத்தம் 8 பாடல்கள் படத்தில் உள்ளதாக அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications