Vettaiyan vs GOAT: 3வது நாளில் வேட்டையன் வசூல் முன்னேற்றம்.. கோட் லைஃப் டைமுக்கு வேட்டு வைக்குமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. வசூலிலும் அடுத்தடுத்த நாட்களில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்த படம் கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 90 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனுடைய சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் படம் 158 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினமும் வாரயிறுதி நாளாக அமைந்துள்ள நிலையில், படத்தின் வசூல் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

vijay goat movie vettaiyan movie

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆயினும் படத்திற்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. போலி என்கவுண்டருக்கு எதிரான கருத்துக்களை இந்த படம் கூறிய நிலையில் படத்தில் ரஜினிகாந்த், அமிதாபச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா, பகத் ஃபாசில், கிஷோர் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர். இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான நிலையில் அந்த எதிர்பார்ப்புகளை படம் சரிவர பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வேட்டையன் படம்: இருந்த போதிலும் தலைவர் படம் என்ற வகையில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் ஆயுத பூஜை கொண்டாட்டத்தையொட்டி படம் திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது. அடுத்தடுத்த விடுமுறை தினங்களில் திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதனிடையே கடந்த 3 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 158 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்றைய தினமும் வாரயிறுதி நாளாக உள்ள நிலையில் இந்த வசூல் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

வேட்டையன் vs கோட் வசூல்: இதனிடையே கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான விஜய்யின் கோட் படம் இதே மூன்று நாளில் 200 கோடி ரூபாய்களை தாண்டி வசூல் செய்திருந்தது. நான்கு நாளில் கோட் படம் 288 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்தப்படம் தொடர் விடுமுறை இல்லாத நேரத்தில் ரிலீசான நிலையிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. இந்நிலையில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை இருந்தும் வேட்டையன் படம் ரசிகர்களை அதிகமாக கவராமல் வசூலில் குறைந்துள்ளது.


கோட் படத்தை பீட் செய்யுமா வேட்டையன்?: இதனிடையே கோட் படத்தின் ஒட்டுமொத்த அதிகாரப்பூர்வ வசூல் 455 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூலை ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இனிவரும் நாட்களில் பீட் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினிகாந்தின் முந்தைய படமான சர்வதேச அளவில் 635 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்த நிலையில், வேட்டையன் படமும் அந்த வசூலை எட்டி, ஒட்டுமொத்த வசூலில் கோட் படத்தை பீட் செய்யுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். இதுவரை படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை லைகா நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X