Vettaiyan Audio Launch: குட்டி கதையுடன் ரஜினிகாந்த் ரெடி.. வேட்டையன் ஆடியோ லாஞ்ச் தேதி குறிச்சாச்சு!

சென்னை: சூர்யாவை வைத்து ஜெய்பீம் எனும் தரமான சம்பவத்தை செய்த இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து பக்கா பிளான் உடன் சூப்பர் ஸ்டார் களமிறங்க உள்ள நிலையில், சூர்யா தனது கங்குவா படத்தின் ரிலீஸை போஸ்ட்பாண்ட் செய்து புதிய ரிலீஸ் தேதியை கூட இன்னமும் அறிவிக்காமல் அமைதியாக உள்ளார்.

vettaiyan rajinikanth audio launch


அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் இன்னமும் ரெடியாகாத நிலையில், லைகா நிறுவனம் முழு கவனத்தையும் வேட்டையன் படத்தின் மீது செலுத்தி வருவதாகவும் வேட்டையன் வெளியான பின்னர் தான் விடாமுயற்சி அப்டேட்கள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காக்கா - கழுகு குட்டி கதை: தமன்னாவின் காவாலா பாடல் தான் ஜெயிலர் படத்துக்கு முதல் ஹைப்பை கொடுத்தது. அதன் பின்னர் ஹுகும் பாடலும் அந்த ஹைப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதையெல்லாம் கடந்து ஜெயிலர் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து நேற்று இரவு துபாயில் நடைபெற்ற சைமா 2024 விருது விழாவில் 5 விருதுகளை ஜெயிலர் படம் வெல்லவே ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன அந்த காக்கா - கழுகு கதை தான் காரணம் என்கின்றனர்.

லியோ வெற்றி விழா வரை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா - கழுகு கதையில் நடிகர் விஜய்யை தான் காக்கா என ரஜினிகாந்த் சொன்னதாக பஞ்சாயத்துகள் கிளம்பின. லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறாத நிலையில், வெற்றி விழாவில் தளபதி விஜய்யும் காக்கா - கழுகு என தனது பேச்சில் பேசும் அளவுக்கு அந்த பிரச்சனை பெரிதானது.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா தேதி: ஞானவேல் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கப் போவதாகவும் அனிருத் லைவ் பர்ஃபார்மன்ஸ் செய்து ஜெயிலர் வைபை மீண்டும் ரீக்ரியேட் செய்வார் எனக் கூறுகின்றனர். மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன குட்டி கதை சொல்லப்போகிறார் என்பதை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X