Vettaiyan Box Office Prediction: 200 கோடி பட்ஜெட்.. வேட்டையன் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?
சென்னை: கார்ப்பரேட் புக்கிங்கே வேண்டாம் என்கிற அளவுக்கு ரசிகர்களே ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்கு டிக்கெட்டுகளை புக் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் கோட் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்கு அதிகளவிலான டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளது.
சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது.

இதுவரை அந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் வழங்கப்படாத நிலையில், முதல் காட்சி தமிழ்நாட்டில் 11 மணிக்கு மேல் தான் தொடங்குகிறது. பல திரையரங்குகளில் 12 மணிக்கு மேல் தான் தொடங்குகிறது. மாயாஜால் சினிமாஸில் மட்டும் காலை 10 மணிக்கு ஒரு காட்சிக்கு டிக்கெட் புக்கிங் நடைபெற்றிருக்கிறது.
வருகிறான் வேட்டையன்: லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது. அக்டோபர் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் தரிசனத்துக்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்கவுன்ட்டர் மற்றும் கல்வி மாஃபியாவை குறி வைத்து வேட்டையன் கழுகு வேட்டையாட காத்திருப்பதாக கூறுகின்றனர்.
பட்ஜெட் மற்றும் சம்பளம்: நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த படத்தில் நடிக்க 125 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். அமிதாப் பச்சனுக்கு 7 கோடி ரூபாயும், பகத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதிக்கு 2 கோடி ரூபாயும், மஞ்சு வாரியருக்கு 1.5 கோடி ரூபாயும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக படத்தின் பட்ஜெட் 160 கோடி முதல் 200 கோடி தான் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகளவில் முதல் நாள் வசூல் கணிப்பு: வேட்டையன் திரைப்படம் அமெரிக்காவில் ப்ரீ புக்கிங்கில் அமெரிக்காவில் மட்டுமே 40 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இதுவரை 8 கோடி ரூபாய் வசூல் வேட்டையை ப்ரீ புக்கிங்கில் வேட்டையன் நடத்தியிருப்பதாக கூறுகின்றனர். முதல் நாளில் அதிகபட்சம் 70 முதல் 80 கோடி வசூலை ரஜினிகாந்தின் வேட்டையன் படம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் வசூலை முந்துமா?: வேட்டையன் திரைப்படத்தின் கதை க்ளிக் ஆனால், கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையான 600 கோடி வசூலை வேட்டையன் முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அதிகபட்சமாக 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட் வசூலை முந்துமா?: இந்த ஆண்டு விஜய்யின் கோட் திரைப்படம் வசூல் செய்துள்ளதை விட ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அதிகளவில் வசூல் செய்யுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் படமாக எந்த படம் அமையும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சூர்யாவின் கங்குவா திரைப்படமும் இந்த போட்டியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











